iQOO யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் அதிரடியாக ரூ,13,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் iQOO பிரியாரக இருந்தால் உங்களுக்கு iQOO 12 யின் இந்த ப்ளாக்ஷிப் போன் வாங்குவதற்க்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது இந்த போனில் கஸ்டமர் 13,000ரூபாய் மிச்சப்படுத்தலாம், மேலும் இந்த விலை குறைப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும் அதாவது மிக சிறந்த பேங்க் ஆபர் நன்மையுடன் வாங்கலாம் iQOO 12,போன் அறிமுகத்தின்போது இந்த போன் 52,999ரூபாய் இருந்தது இப்பொழுது இந்த போனில் அதிரடி விலை குறைப்பு ஏற்ப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் பல டடிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அமேசானில் iQOO 12 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் விலை
iQOO 12 தற்போது அமேசானில் எந்த பேங்க் சலுகைகளும் இல்லாமல் ரூ.39,999க்கு கிடைக்கிறது, இது ரூ.52,999 ஆக இருந்தது. உங்களிடம் ஃபெடரல் பேங்க் கார்ட் இருந்தால், ரூ.1,000 வரை தள்ளுபடி பெறலாம், இதன் மூலம் விலை ரூ.39,000க்கு கீழ் குறைகிறது. மாதத்திற்கு ரூ.1,934 யில் தொடங்கும் EMI விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை எக்ச்செஜ் செய்தால் ரூ.37,100 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பைப் பெறலாம். உங்கள் பழைய சாதனத்தின் சரியான மதிப்பு சாதனத்தின் மாடல் மற்றும் வேலை நிலைமைகளைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளவும்.
கூடுதல் சலுகைகளுக்கு, கஸ்டமர்கள் ரூ.2,699க்கு 1 வருட மொபைல் டேமேஜ் பாதுகாப்பையும், ரூ.1,549க்கு 1 வருட கூடுதல் மொபைல் உத்தரவாதத்தையும், ரூ.1,999க்கு 1 வருட ஸ்க்ரீன் டேமேஜ் பாதுகாப்பையும் பெறலாம்.
iQOO 12 சிறப்பம்சம்
iQOO 12 ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை 1.5K ரேசளுசன் , HDR10+ சப்போர்ட் மற்றும் மென்மையான டிஸ்ப்ளே உறுதி செய்வதற்காக 144Hz மாறி ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது, இது கேமிங் பர்போமான்ஸ் மேம்படுத்த Q1 கேமிங் சிப்செட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது: 50MP ப்ரைம் கேமரா சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 64MP டெலிஃபோட்டோ கேமரா. இது செல்ஃபி எடுப்பதற்காக 16MP முன் கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங் திறன்களுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க:Motorola யின் புதிய போன் வரும் குஷியில் பழைய போனுக்கு அதிரடியாக ரூ,19,500 டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile