iQOO 12 vs Vivo X100 ஒரே மாதுரியான கேமார லுக் கொண்ட இந்த போனில் எது பெஸ்ட்

Updated on 01-Dec-2023
HIGHLIGHTS

iQOO யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் iQOO 12 சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த ப்ளாக்ஷிப் போனில் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வருகிறது

Vivo அதன் Vivo X100 ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது

iQOO யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் iQOO 12 சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் நவம்பர் 14 முதல் நாட்டில் கிடைக்கும். இந்த ப்லாக்ஷிப் போனில் Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வருகிறது. இதற்கிடையில், Vivo அதன் Vivo X100 ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 8 Gen 3 போட்டி மீடியாடெக் டிமான்சிட்டி 9300 SoC பொருத்தப்பட்டுள்ளது.

iQOO 12 டிசம்பர் 12 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். X100 விரைவில் நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க.

iQOO 12 vs Vivo X100: Display

முதலில் iQOO போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், 6.78-இன்ச் AMOLED ஸ்க்ரீனில் வருகிறது. மேலும் இதில் 1260 x 2800 பிக்சல்கள் ரேசளுசன் 3000 nits ஹை ப்ரைட்னஸ் மற்றும் 144Hz ரெப்ரஸ் ரேட் வழங்கும்

அதுவே X100 மாடலில் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 2800 x 1260 பிக்சல் ரேசளுசன் மற்றும் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் உடன் வழங்குகிறது. தவிர, இது 3000 nits ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

iQOO 12 vs Vivo X100: Performance

ஸ்மார்ட்போன்களின் பர்போமான்ஸ் அவற்றின் முக்கிய பாகங்களில் ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், iQOO 12 பற்றி பேசினால், இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ப்லாக்ஷிப் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசரில் இயங்குகிறது. இது தவிர, இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch 14 OS யில் வேலை செய்கிறது. இந்த ஃபோன் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வழங்குகிறது.

12 ডিসেম্বর ভারতে আসছে iQOO 12 5G

அதன் மற்றொரு போனன Vivo X100 யில் மீடியாடேக் டிமான்சிட்டி 9300 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையிலான OriginOS 4 இல் இயங்குகிறது. இந்த கைபேசியிலும் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் விருப்பங்களைப் வழங்குகிறது

iQOO 12 vs Vivo X100: Camera

iQOO ஸ்மார்ட்போனின் கேமரா பிரிவில், 50MP ப்ரைமரி கேமரா சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் கேமரா அமைப்பைக் காண்கிறோம். செல்ஃபி எடுக்க 16எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.

இதற்கிடையில், Vivo ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டிங் வழங்குகிறது. இதன் கேமரா மாட்யுல் 50MP ப்ரைமரி கேமரா, 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் மற்றும் 50MP அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர, போனின் முன்பக்கத்தில் 32MP செல்ஃபி ஷூட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

Vivo X100 Pro+ leaked

iQOO 12 vs Vivo X100: battery

இந்த இரண்டு போன்களிலும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது, இதை தவிர 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Redmi K70 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம், 50MP கேமரா கொண்டிருக்கும்

iQOO 12 vs Vivo X100: Price

விலையைப் பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களும் தற்போது சீனாவில் கிடைக்கின்றன. இரண்டும் CNY 3,999 இன் ஆரம்ப விலையில் வருகின்றன, இது இந்தியாவில் தோராயமாக ரூ.45,500 ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :