ஐகூ 12 ஸ்மார்ட்போன் சீரிஸ் நவம்பர் 7 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. நிறுவனம் iQoo 12 மற்றும் iQoo 12 Pro மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த சீரிச்ன் ப்ரோசெசர் மற்றும் பின் பேனல் வடிவமைப்பு உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. கேமரா விவரங்களும் டீஸ் செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பு என்னவென்றால், ஐகூ 12 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி தெரியவந்துள்ளது. ஐகூ யின் புதிய போன்கள் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
ஒரு ஈமெயில் இன்வைட் மூலம் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி CEO நிபுன் மரியாவும் சோசியல் மீடியா தளமான X யில் ஒரு பதிவில் iQoo 12 5G டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த போன் சீரிஸ் டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யப்படும். தொடரின் அடிப்படை வேரியன்ட் ஐகூ 12 ஆக இருக்கும், இது ஐகூ 11 மாற்றும். இருப்பினும், ஐகூ 12 சீரிஸ் ப்ரோ மாடல்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுமா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் ஐகூ 12 5G யில் இது குவால்காமின் சமீபத்திய ப்ரோசெசரனா ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 உடன் நிரம்பியிருக்கும். இது ஆண்ட்ராய்டு 14 உடன் வரலாம். ஃபோனில் 6.78-இன்ச் BOE OLED பேனல் 1.5K ரேசளுசன் மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் இருக்கலாம். இதன் டிஸ்ப்ளே 3 ஆயிரம் நிட்களின் ஹை ப்ரைட்னஸ் மற்றும் 2,160Hz PWM டிம்மிங் வீதத்தைக் கொண்டிருக்கும்.
கேமரா பற்றி பேசினால், ஐகூ 12 யில் மூன்று கேமரா யூனிட் இருக்கும் என கூறப்படுகிறது போனின் ஆப்டிகல் ஸ்டேப்லைசெசன் (OIS) உடன் 50மேகபிக்சல் யின் ஒம்நிவிசன் OV50H சென்சார் இருக்கும், மேலும், அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படலாம். இந்த ஃபோன் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வரலாம். போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.
இதையும் படிங்க: Amazon GIF Sale: கேமிங் லேப்டாப்பில் அதிரடி தள்ளுபடி
ஐகூ 12 5G ஆனது IP64 ரேட்டிங்கை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது புளூடூத் 5.4, NFC மற்றும் Wi-Fi 7 போன்ற இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. ஃபோனில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4880mAh பேட்டரி இருக்கலாம்.