iQOO 12 Pro அறிமுகப்படுத்தப்பட்டது, ஐகூ 12 Pro ஸ்மார்ட்போன் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த போன் வாட்டர் ரேசிச்டன்ட் டிசைனை கொண்டுள்ளது. இது தவிர, ஃபோனில் 120W பாஸ்ட் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
ஐகூ 12 pro ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 4999 யுவான் அதாவது சுமார் ரூ.58054. இந்த போன் நவம்பர் 24 முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் BMW லோகோவுடன் வரும் லெஜென்ட் எடிஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமேல்லாமல் இந்த போன் Track Black Edition யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த இரண்டு மாடல்களிலும் கிளாஸ் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், Red Edition உள்ளது, இது லெதர் போன்ற பினிசுடன் வழங்கப்படுகிறது.
ஐகூ 12 Pro ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் கர்வ்ட் HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் 1440×3200 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது மற்றும் 144Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது
இது ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் உங்களுக்கு ஸ்மூத் பர்போமான்ஸ் வழங்குவதாகும். இது மட்டுமின்றி, இந்த போன் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது அதாவது Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது
ஐகூ 12 Pro ஸ்மார்ட்போன் Android 14 யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதை சப்போர்ட் அல்லது போன் FouTouch OS 14 ஐ ஆதரிக்கிறது.
ஐகூ 12 Pro மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது. ஃபோனில் 50MP ப்ரைம் கேமரா உள்ளது, இதில் f/1.68 aperture பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 50MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸும் உள்ளது, இது Samsung JN1 சென்சார் ஆகும். இது மட்டுமின்றி, இந்த போனில் 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸும் உள்ளது. போனில் 16எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :Jio பெஸ்ட் வருடாந்திர பிளான் ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி தான்
ஐகூ 12 Pro 5100mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இந்த போனின் பேட்டரி 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் பவர் கொண்டுள்ளது. இது மட்டுமின்றி, இந்த போனில் 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் பவர் உள்ளது.