iQOO 12 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3’ ப்ரோசெசருடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த போனில் 144Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன. ஐகூ 12 5G இரட்டை 50 மெகாபிக்சல் பின்புற கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டருடன் வருகிறது. செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல். ரூ.50 ஆயிரம் விலை பிரிவில் வரும் இந்த போன் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் அடிப்படை மாடல் ரூ.52,999 மற்றும் 16ஜிபி + 512ஜிபி கொண்ட ஹை வேரியண்டின் விலை ரூ.57,999. முன்னுரிமை அடிபடையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 13 முதல் வாங்குவதற்கும் மற்ற அனைவருக்கும் டிசம்பர் 14 முதல் வாங்குவதற்கும் இது கிடைக்கும்.
ஐகூ 12 5G ஆனது 6.78 இன்ச் LTPO AMOLED 1.5K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. ஐகூ 12 5G ஆனது 3 ஆயிரம் நிட்களின் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் HDR10+ சப்போர்ட் செய்கிறது நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஐகூ 12 5G ஆனது Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசருடன் நிரம்பியுள்ளது. இந்த ப்ரோசெசருடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த போனில் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேமில் இருக்கிறது அதிகபட்ச ஸ்டோரேஜ் 512 ஜிபி.வரை இருக்கிறது
ஐகூ 12 5G ஆனது நிறுவனத்தின் Q1 சூப்பர் கம்ப்யூட்டிங் சிப்பைக் கொண்டுள்ளது மற்றும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த Adreno 750 GPU ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையிலான FuntouchOS 14 யில் இயங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்க்ரேட் கொண்டுக்ள்ளது ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி இணைப்புகளையும் வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: BSNL வருடத்திர பிளான் ரூ,2,999 யில் கிடைக்கும் Extra Validity மற்றும் பல சூப்பர் நன்மைகள்
ஐகூ 12 5G ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது அதே நேரத்தில் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் இந்த போனில் கிடைக்கிறது. கேமரா பற்றி பேசுகையில்,. நிறுவனம் டிரிபிள் ரியர் கேமரா செட்டிங்குடன் அலங்கரித்துள்ளது. ப்ரைம் கேமரா சென்சார் 50 மெகாபிக்சல்கள், இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரிக்கிறது. இது 50MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது.
போனில் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது, இது 3x ஆப்டிகல் ஜூம் வழங்குகிறது. இந்த போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. ஐகூ 12 5G யில் பல லிங்க் விருப்பங்களும் கிடைக்கின்றன.