iQoo 12 5G இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் அமேசானில் லைவ் செய்யப்பட்டுள்ளது

Updated on 15-Nov-2023
HIGHLIGHTS

iQoo 12 சீரிஸ் உலகளவில் நவம்பர் 7 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இது டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த போனை இந்தியாவில் Amazon மூலம் வாங்கலாம்

ஐகூ 12 சீரிஸ் உலகளவில் நவம்பர் 7 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. iQoo 12 மற்றும் iQoo 12 Pro மாதிரிகள் இந்தத் சீரிசின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது பேஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த போனை இந்தியாவில் Amazon மூலம் வாங்கலாம். இது சீனாவில் பர்னிங் வே, லெஜண்ட் எடிசன் மற்றும் ட்ராக் வெர்சன் நிறங்களில் கிடைக்கிறது.

iQoo 12 சைட்டில் லைவ் ஆகியது

ஐகூ 12 மாடலுக்கான மைக்ரோசைட் Amazon யில் லைவ் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த போன் அமேசானுக்கு கிடைக்கும் என்பது தெரிய வருகிறது. சீனாவில், iQoo 12 யின் 12GB + 256GB வேரியன்ட் CNY 3,999 (தோராயமாக ரூ. 45,000) யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில், அதன் 16GB + 512GB மற்றும் 16GB + 1TB வகைகளின் விலை முறையே CNY 4,299 (தோராயமாக ரூ. 50,00) மற்றும் CNY 4,699 (தோராயமாக ரூ. 53,000) ஆகும்.

ஐகூ 12 யின் சிறப்பம்சம்

ஐகூ 12 ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1.5K (1260×2800 பிக்சல்கள்) ரேசளுசனுடன் வருகிறது. இதன் ரெப்ராஸ் ரேட் 144Hz வரை இருக்கும். இது HDR10+ சப்போர்டுடன் 20:9 என்ற ரேசியோவை கொண்டுள்ளது.

இந்த ஃபோனில் octa-core 4nm Snapdragon 8 Gen 3 SoC பொருத்தப்பட்டுள்ளது. இதில் Adreno 750 GPU உள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS 4 யில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க: Jio AirFiber நாட்டில் 115 நகரங்கள் வரை சென்றுள்ளது

ஐகூ 12 ஆனது டிரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன் ப்ரைமரி கேமரா சென்சார் 50 மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ஆகும். அதே நேரத்தில், இரண்டாவது 100X டிஜிட்டல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகும். மூன்றாவது சென்சார் அல்ட்ரா வைட் உடன் 50 மெகாபிக்சல்கள். போனில் 16 மெகாபிக்சல் முன் சென்சார் உள்ளது. iQoo 12 பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 120W 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனுடன், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :