இந்தியாவில் ஐபோன் XS விலை குறைந்துள்ளது மற்றும் அசத்தல் ஆபர்..!

Updated on 26-Sep-2018
HIGHLIGHTS

ந்தியா ஐ ஸ்டோர் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் குறைந்த மாத தவணை முறையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஆப்பிள் விற்பனையாளர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான இந்தியா ஐ ஸ்டோர் புதிய ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் குறைந்த மாத தவணை முறையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் XS சீரிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் ஏர்டெல், ஜியோ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரயிருக்கும் ஐபோன் XS சீரிஸ் மாடலுக்கு மாத தவணை முறை வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இவற்றை பெற பயனர்கள் தங்களுக்கான ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாஐஸ்டோர் வலைத்தளத்தில் மாத தவணை முறை கணக்கீடு செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஐபோன் மாடல்களை எளிய மாத தவணை முறை வசதியில் பெற முடியும். அந்த வகையில் ஐபோன் XS (64 ஜிபி) மாடல் 24 மாதங்களுக்கு தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் மாதம் ரூ.4,499 செலுத்த வேண்டும். 

அந்த வகையில் மாத தவணைக்கான வட்டியுடன் சேர்த்து ஐபோன் XS (64 ஜிபி) விலை ரூ.1,07,976 ஆகும். ஐபோன் XS (256 ஜிபி) மாடலுக்கு ரூ.5,175 என 24 மாதங்களுக்கு செலுத்த வேண்டும். அந்த வகையில் இதன் விலை ரூ.1,24,200 ஆகும். மாத தவணை இன்றி ஐபோன் XS (64 ஜிபி) மாடல் ரூ.99,900 மற்றும் ஐபோன் XS (256 ஜிபி) வேரியன்ட் விலை ரூ.1,14,900 ஆகும்.

இதேபோன்று ஐபோன் XS (512 ஜிபி) மாடலை மாத தவணை முறையில் வாங்க 24 மாதங்களுக்கு ரூ.6,076 செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வட்டியுடன் சேர்த்து ஐபோன் XS (512 ஜிபி) விலை ரூ.1,45,824 ஆகும். மாத தவணையின்றி வாங்கும் போது ஐபோன் XS (512 ஜிபி) விலை ரூ.1,34,900 ஆகும்.

மாத தவணை முறையில் ஐபோன் XS மேக்ஸ் வாங்கும் பயனர்கள் 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியன்ட்களுக்கு முறையே ரூ.4999, ரூ.5,678 மற்றும் ரூ.6,587 தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும் வட்டியில்லாமல் வாங்கும் போது ஐபோன் XS மேக்ஸ் விலை ரூ.1,09,900, ரூ.1,24,900 மற்றும் ரூ.1,44,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :