ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் ஐபோன் X மாடல் கோல்ட் கலர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் சமீபத்திய புகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனம் தங்க நிற ஐபோன் X உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத தேதி கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் தவறுதலாக வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. தங்க நிற ஐபோன் X ப்ரோடோடைப் ஸ்டெயின்லெஸ் ஃபிரேம் மற்றும் மெல்லிய தங்க நிற கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது.
புதிய புகைப்படங்களின் படி ஸ்மார்ட்போனில் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் OLED பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர புகைப்படங்களில் எவ்வித மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.
அமெரிக்காவின் FCC-இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகைப்படங்கள் ஐபோன் X வெளியீட்டிற்கு சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தங்க நிற ஐபோன் X மாடலை வெளியிட திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டு ஆப்பிள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் X ஸ்மார்ட்போனினை சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் மட்டுமே வெளியிட்டது. இதுவரை புதிய நிற ஐபோன் X வெளியிடுவது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது.
அந்த வகையில் தங்க ஐபோன் X வெளியிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் புதிய நிற ஐபோன் X ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.