ஐபோன் LE2 லான்ச் ஆக இருக்கும் நிலையில் அதன் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

Updated on 23-Feb-2018
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் LE இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

ஐபோன் LE 2 வெளியீடு குறித்து இன்டெர்நெட்டில்  பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் LE வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) வெளியிடப்படலாம் என சீன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் எஸ்இ2 முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெட்டல் பேக், ஃபிரேம், முன்பக்க பெசல்கள், ஹோம் பட்டன் உள்ளிட்டவற்றுடன் பெரிய 4.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் LE 2 முன்பக்கம் இப்போதைய டிரெண்ட் பின்பற்றும் வகையில் சற்றே மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் பேஸ் ஐடி மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் A10 பியூஷன் சிப்செட், 2 GB ரேம், 32 GB அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் ஐபோன்களை டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்ததில்லை.

அந்த வகையில் புதிய ஐபோன் LE2 மென்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த டெவலப்பர்களுக்கான விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை வழங்கியிருக்கும் வலைத்தளம் லீக்ஸ் மற்றும் தகவல்களை முடிந்த வரை உண்மையாகலாம் என்றாலும் இதுவரை ஆப்பிள் சார்பில் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. 

இதேபோன்று பிரபல ஆப்பிள் டிப்ஸ்டரான மிங் சி கியோ ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :