புதிய Iphone SE 2 மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

புதிய Iphone SE 2 மே மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோன் எஸ்இ தற்போதைய எஸ்இ மாடலின் அளவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல்களின் விற்பனையை செப்டம்பர் மாதம் முதல் ஆப்பிள் நிறுத்தலாம் என்றும், அதன்பின் ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன் ஜாக் கொண்ட ஐபோன் மாடல்களை விற்பனை செய்யாது என்றும் கூறப்படுகிறது. 

புதிய ஐபோன் SE 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ2 ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.  

பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo