ஆப்பிள் புதிய ஐபோன் வெளியிட திட்டம்

ஆப்பிள் புதிய ஐபோன் வெளியிட  திட்டம்
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அந்நிறுவனம் புதிய ஐபோனினை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் மூன்று ஐபோன்களை வெளியிட இருக்கிறது, இதில் ஒன்று ஐபோன் X மேம்படுத்தப்பட்ட மாடல் என கூறப்படுகிறது.

மூன்று ஐபோன்களும் பெரிய மாடல்கள் என்ற வாக்கில் குறைந்த விலையில் மற்றொரு ஐபோன் மாடலை ஆப்பிள் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை குறைந்த ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் என்றும் கூறப்படுகிறது.

ஐபோன் எஸ்இ2 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த ஐபோனின் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் விலை குறைந்த ஐபோன் மாடல் 2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

புதிய ஐபோன் வெளியீட்டுக்கு முன் யூரேஷியன் எகனாமிக் கமிஷனில் (ECC) ஆப்பிள் பதிவு செய்திருக்கும் சில ஐபோன் மாடல்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. ECC பட்டியலின் படி மொத்தம் 11 ஐபோன் மாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவை முறையே A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2014, A2015 மற்றும் A2016 என பெயரிடப்பட்டுள்ளன.

இந்த 11 ஐபோன் மாடல்களில் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இத்துடன் இந்த பெயர்கள் அனைத்தும் மற்ற சாத்னங்களுக்கு என இதுவரை பயன்படுத்தப்படவில்லை என ஆப்பிள் இன்சைடர் தெரிவித்துள்ளது. ECC பட்டியலில் ஐபோனின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவை ஐபேட்களின் பெயர் கிடையாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் தனது புதிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்திருந்தது.

ஆப்பிள் உயர் ரக ஐபோன் மாடல்கள் ஆண்டின் இரண்டாவது பாதியில் அறிமுகம் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டும் இதே வழிமுறையை பின்பற்றலாம். அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 விரைவில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo