iPhone 16 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே விலை, அம்சம் என அம்புட்டு தகவலும் லீக்

iPhone 16 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே விலை, அம்சம் என அம்புட்டு தகவலும் லீக்
HIGHLIGHTS

Appleஸ் யின் iPhone 16 சீரிஸ் அடுத்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக இருக்கும்

இந்த சீரிஸ் கீழ் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, மற்றும் iPhone 16 Pro Max. என் இருக்கிறது

இப்பொழுது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்கள் லீக் ஆகியுள்ளது

Appleஸ் யின் iPhone 16 சீரிஸ் அடுத்த மாதம் உலக சந்தையில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த சீரிஸ் கீழ் iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, மற்றும் iPhone 16 Pro Max. என் இருக்கிறது எப்பொழுதும் ஆப்பில் அறிமுகத்திற்க்கு முன் எந்த தகவலையும் வெளியிடாது ஆனால் இந்த ஆண்டு வர இருக்கும் ஸ்மார்ட்போன் பற்றி பல தகவல் லீக் ஆகியுள்ளது இந்த ஆண்டு நான்கு iPhone மாடல்கள் வர வரிசையில் இருக்கிறது மேலும் இந்த போன்கள் Apple இன்டலிஜன்ஸ் அம்சத்துடன் வருகிறது, அதுவே பிளஸ் வேரியண்டில் ஒரு சியா பேட்டரி இருப்பதாக கூறப்பட்டுள்ளது இருப்பினும் இப்பொழுது இந்த போன்களின் விலை மற்றும் அம்சங்கள் லீக் ஆகியுள்ளது அதை பற்றி முழுசாக பார்க்கலாம்.

iPhone 16 Series விலை லீக்

இந்த சீரிஸின் அனைத்து மாடல்களிலும் Apple Intelligence அம்சங்களைக் காணலாம். ஆப்பிள் ஹப் சோசியல் மீடியா தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது iPhone 16 யின் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சுமார் $799 ஆகவும், அதாவது இந்திய மதிப்பு படி 67,100ரூபாயாக இருக்கலாம் iPhone 16 Plus யின் விலை $899 (ரூ. 75,500))ஆகவும் இருக்கலாம். இந்த சீரிஸின் ஐபோன் 16 ப்ரோவின் விலை சுமார் $1,199 ( 1,00,700 ரூபாயாக) இருக்கும்.

iPhone 16 சீரிஸ் எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

இரு iPhone 16 மற்றும் iPhone 16 Plus யின் ஆப்பில் யின் சொந்த A18 சிப்செட் இருக்கும் வதந்தியில் லீக் கூறப்படுகிறது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15 தொடரின் iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max இல் Apple Intelligence அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை முதன்முறையாக நாட்டில் அசெம்பிள் செய்ய முடியும். ஆப்பிள் தனது உற்பத்தியின் பெரும் பகுதியை சீனாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஐபோன் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இந்த போனின் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.1- இன்ச் டிஸ்ப்ளே உடன் 60Hz ரெப்ராஸ் ரேட் அதுவே பிளஸ் மாடலில் 6.7- இன்ச் கொண்ட டிப்ளே இருக்கிறது டிஸ்ப்ளே முன்பக்கத்தில், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றிலிருந்து அதிகம் மாறியதாகத் தெரியவில்லை. இதேபோல், போன்கள் ப்ரைமரி கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் சப்போர்ட் மற்றும் Wi-Fi 6E கனேக்சனுக்கான சப்போர்டுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆப்பிளின் Phone 16 உடன் பெரிய 3,561mAh பேட்டரி உடன் வரும் அதுவே iPhone 16 Plus predecessor 4,383mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது 4,006mAh பேட்டரியுடன் வரலாம்.

iPhone 16 Pro, சீரிஸ் லீக் சிறப்பம்சம்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் முறையே 6.3 இன்ச் மற்றும் 6.9 இன்ச் டிஸ்ப்ளேக்கள் பொருத்தப்பட்டிருக்கும், இது திரை அளவில் சிறிய 0.2 இன்ச் அதிகரிப்பைக் குறிக்கும்., மேலும் சமிபத்திய அறிக்கையின் படி Pro Max மாடலில் மெல்லிய டிஸ்ப்ளே அதாவது bezel இருக்கலாம், இதை தவிர ஆப்ளின் இந்த வர இருக்கும் இரண்டு pro மாடல்களிலும் A18 Pro சிப்செட் மற்றும் இன்டலிஜன்ஸ் சப்போர்டுடன் வரலாம்.

ஸ்டேட்டர்ட் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களைப் போலல்லாமல், ஆப்பிளின் பிரீமியம் மாடல்கள் அதிக ரேசளுசன் கொண்ட 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் பொருத்தப்பட்டிருக்கும், ஆஃபர் 5x ஆப்டிகல் ஜூம் ஆதரவின் இடுகையின் படி, நிறுவனம் அவற்றைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கிறது. அதன் ‘டெட்ராபிரிசம்’ பெரிஸ்கோப் லென்ஸ்.

இந்த ஆண்டு ஆப்பில் iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max.அப்க்ரேட் பேட்டரியுடன் கொண்டு வரும் மேலும் இதில் கூறியபடி 3,355mAh பேட்டரியும் அதுவே பெரிய மாடலில் 4,676mAh பேட்டரியும் வழங்கப்படுகிறது ஆனால் iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை முறையே 3,290mAh மற்றும் 4,441mAh பேட்டரிகளுடன் கடந்த ஆண்டு வந்தன.

இதையும் படிங்க iPhone 16 Pro இந்தியா அதாவது நம்ம தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo