iPhone 16 Plus யில் செம்ம அதிரடி ஆபர் 5000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்

Updated on 24-Dec-2024

இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்திய பெரிய டிஸ்ப்ளே iphone 16 plus வாங்க நீங்கள் நினைத்தால், இந்த வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள், இ-காமர்ஸ் தளமான அமேசான் 16 பிளஸ் மீது பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஐபோன் மீது பெரும் விலை குறைப்புடன், சிறந்த பேங்க் சலுகைகளும் இங்கு வழங்கப்படுகின்றன. iPhone 16 Plus யில் கிடைக்கும் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் பற்றி பார்க்கலாம் வாங்க.

iphone-16-plus

iPhone 16 Plus விலை மற்றும் டிஸ்கவுன்ட்

ஐபோன் 16 பிளஸின் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் , இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.86,900 க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது , அதேசமயம் ரூ.89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.81,900 ஆக மாறும். இது தவிர, உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்து ரூ.26,750 தள்ளுபடி பெறலாம்.

iPhone 16 Plus சிறப்பம்சம்.

iPhone 16 Plus ஆனது 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஐபோன் iOS 18 யில் வேலை செய்கிறது. இந்த ஐபோனில் புத்தம் புதிய ஆக்டா கோர் ஏ18 சிப்செட் உள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, போனில் டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்க IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. புதிய A18 சிப்செட் ஐபோன் 16 பிளஸை இயக்குகிறது, இதில் 2 பர்போமான்ஸ் கோர்கள் மற்றும் 4 செயல்திறன் கோர்கள் கொண்ட 6-கோர் CPU உள்ளது.

iPhone 16 Plus ஆனது அடிப்படை iPhone 16 இன் அதே கேமரா அமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது- செங்குத்து அமைப்பில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை சென்சார் 48 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , இது 12 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் சரியான பேட்டரி திறனை வெளியிடவில்லை என்றாலும், ஐபோன் 16 பிளஸ் 27 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 100 மணிநேர ஆடியோ பிளேபேக்கை வழங்குகிறது, இது கட்டணங்களுக்கு இடையில் நீண்ட பயன்பாட்டை உறுதி செய்கிறது.

இதையும் படிங்க:Lava யின் இந்த போன் அதிரடி குறைப்பு புதுசா வந்த கையோட மக்களை மகிழ வைத்த வள்ளல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :