iPhone 15 சீரிஸ் செம்ம ஆபர் 7500 ரூபாய் வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும்

Updated on 19-Sep-2023
HIGHLIGHTS

iPhone 15 series செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

​​iPhone, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன் ப்ரீ ஆர்டர்கள் செப்டம்பர் 15 முதல் தொடங்கும். அவற்றின் விற்பனை செப்டம்பர் 22 அன்று ஏற்பாடு செய்யப்படும்

iPhone 15 series செப்டம்பர் 12 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆப்பிளின் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ​​iPhone, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகிய நான்கு மாடல்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. நீண்ட நாட்களாக  எதிர்ப்பார்த்து  காத்து  கொண்டிருந்தவர்களுக்கு  இது நல்ல  வாய்ப்பாக  இருக்கும்  இதன் ப்ரீ ஆர்டர்கள் செப்டம்பர் 15 முதல் தொடங்கும். அவற்றின் விற்பனை செப்டம்பர் 22 அன்று ஏற்பாடு செய்யப்படும்  மேலும் தற்பொழுது  இதன் பல சலுகைகளுடன் Vijay Sales, Flipkart, மற்றும்  Amazon யில்  பல டீல்ஸ் கிடைக்கும் USB Type-C சார்ஜிங் முதல் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் நாட்ச் வரை, இந்தத் சீரிச்ன் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Croma

ஐபோன் 15 ஐ ஆன்லைனில் ப்ரீ ஆர்டர் செய்தால், ஒரே நேரத்தில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் குரோமாவின் ஃபிசிக்கல் ஸ்டோரில் ப்ரீ ஆர்டர் செய்தால், முழுப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.2,000க்கு இங்கிருந்து முன்பதிவு செய்யலாம். கூடுதலாக, நீங்கள் HDFC கிரெடிட் கார்டு அல்லது EMI ஐ தேர்வு செய்தால் iPhone 15 மற்றும் iPhone 15 Plus வாங்கினால், 5,000 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். ப்ரோ மாடலுக்கு ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படும்.

இதை தவிர நீங்கள்  செப்டமபர் 18. முன்  முன்பதிவு  செய்தால் Croma Sunburn Cruise Control டிக்கெட்  வெல்ல  வாய்ப்பு கிடைக்கும்.

Vijay Sales

Vijay Sales யில் நீங்கள் HDFC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இங்கிருந்து iPhone 15 ஐ வாங்கினால், NO cost EMI யில் 4,000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம் 

அதே நேரத்தில், HSBC கிரெடிட் கார்டு EMI ஐப் பயன்படுத்தினால், 5 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடி ரூ.7,500 வரை வழங்கப்படும். நீங்கள் YES பேங்க் கிரெடிட் கார்டு EMI விருப்பத்தைப் பயன்படுத்தினால், உங்களுக்கு  கூடுதலாக 2,000 ரூபாய் இன்ஸ்டன்ட்  தள்ளுபடி வழங்கப்படும்.  

Amazon மற்றும் Flipkart:

Amazon

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உங்களிடம் HDFC பேங்க் கார்ட் இருந்தால், இன்ஸ்டன்ட் தள்ளுபடியாக ரூ.5,000 வழங்கப்படும். அமேசான் படி, வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 23 முதல் போன்களை வாங்க  தொடங்குவார்கள். 

Flipkart:

அதேசமயம், Flipkart பற்றி பேசினால், iPhone 15 சீரிச்ன் ப்ரீ ஆர்டருக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, நீங்கள்   HDFC கிரெடிட்  கார்ட் பயனராக இருந்தால்  உங்களுக்கு ரூ, 5,000 டிஸ்கவுன்ட்  வழங்கப்படும்.மேலும் நீங்கள் Kotak கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும் 

மேலும் உங்களின் பழைய போனை  எக்ஸ்சேஞ்  செய்தால் 51,000 வரையிலான  தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :