வரவிருக்கும் ஐபோன் சீரிஸ்க்கான லீக்கள் அம்சங்கள், மற்றும் பிற விவரங்கள் வெளிவந்துள்ளது இப்போது ஒரு புதிய ரெண்டர் லீக் ஆகியுள்ளது இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோவின் வெவ்வேறு நிற விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை இரண்டு ஐபோன்களின் மிகவும் துல்லியமான நிறம் மற்றும் உண்மையான ரெண்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆதாரத்தின்படி, ரெண்டர்கள் வட்டமான எட்ஜில் டைட்டானியம் பிரேம் மற்றும் சற்று மொத்தமான கேமரா பம்ப் ஆகியவற்றைக் காட்டுகின்றன. நிற விருப்பங்களைப் பொறுத்தவரை, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் கருப்பு, பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியிடப்பட உள்ளன. இந்த ரெண்டர்களில் இருந்து டிசைன் மற்றும் நிற விருப்பங்கள் கூறப்பட்டுள்ளன.
ஐபோன் 15 சீரிஸ் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைப் வழங்குகிறது ஆப்பிள் ஏ17 பயோனிக் ப்ரோசெசர் புதிய ஜெனரேசன் ஐபோனில் 3என்எம் செயல்பாட்டில் காணலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு பதிலாக டைட்டானியம் பிரேம் கொடுக்கப்படும்.
இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை iPhone 15 Pro மாடல்களான iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும். ஹை மாடல் பிளாக், சில்வர், ப்ளூ மற்றும் கிரே ஆகிய 4 வெவ்வேறு நிறங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 15 Pro சீரிஸ் சிறந்த போட்டோ குவாலிட்டி உடன் ஒரு புதிய சென்சார் டேக்நோலாஜி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது., புதிய ஹாப்டிக் வால்யூம் மற்றும் மியூட் பட்டன்கள் இருக்கும். ம்யூட் டோகிள் கூட ஹாப்டிக் பட்டன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ முந்தைய மாடலை விட சற்று மெலிதாக இருக்கும். டைமென்சன் பற்றி பேசினால், இது 146.47 mmநீளம், 70.46 mm வைட்மற்றும் 8.24 mm திக்னஸ் கொண்டதாக இருக்கும்.
iPhone 15 சீரிஸ் சந்தையில் செப்டமபர் 12 அன்று அறிமுகமாகும் என கூறப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் முன்கூட்டிய ஆர்டர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன மற்றும் செப்டம்பர் 22 முதல் ஷிப்பிங் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, எனவே துல்லியமான தகவலுக்கு, வெளியீட்டிற்கு காத்திருக்க வேண்டும்.