iPhone 15 மற்றும் iPhone 15 Pro கலர் ஆப்சன் போன்ற தகவல் லீக்

iPhone 15 மற்றும் iPhone 15 Pro கலர் ஆப்சன் போன்ற தகவல் லீக்
HIGHLIGHTS

வரவிருக்கும் ஐபோன் சீரிஸ்க்கான லீக்கள் அம்சங்கள், மற்றும் பிற விவரங்கள் வெளிவந்துள்ளது

இப்போது ஒரு புதிய ரெண்டர் லீக் ஆகியுள்ளது

இவை இரண்டு ஐபோன்களின் மிகவும் துல்லியமான நிறம் மற்றும் உண்மையான ரெண்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன

வரவிருக்கும் ஐபோன் சீரிஸ்க்கான லீக்கள் அம்சங்கள், மற்றும் பிற விவரங்கள் வெளிவந்துள்ளது  இப்போது ஒரு புதிய ரெண்டர் லீக் ஆகியுள்ளது இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோவின் வெவ்வேறு நிற விருப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை இரண்டு ஐபோன்களின் மிகவும் துல்லியமான நிறம் மற்றும் உண்மையான ரெண்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆதாரத்தின்படி, ரெண்டர்கள் வட்டமான எட்ஜில் டைட்டானியம் பிரேம் மற்றும் சற்று மொத்தமான கேமரா பம்ப் ஆகியவற்றைக் காட்டுகின்றன. நிற விருப்பங்களைப் பொறுத்தவரை, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் கருப்பு, பச்சை, நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியிடப்பட உள்ளன. இந்த ரெண்டர்களில் இருந்து டிசைன் மற்றும் நிற விருப்பங்கள் கூறப்பட்டுள்ளன.

Iphone 15

iPhone 15 சீரிச்ல் இருக்கும் மாற்றம் 

ஐபோன் 15 சீரிஸ் லைட்னிங் போர்ட்டுக்கு பதிலாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டைப் வழங்குகிறது ஆப்பிள் ஏ17 பயோனிக் ப்ரோசெசர் புதிய ஜெனரேசன் ஐபோனில் 3என்எம் செயல்பாட்டில் காணலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு பதிலாக டைட்டானியம் பிரேம் கொடுக்கப்படும்.

Iphone 15

iPhone 15 pro கலர் ரெண்டர் 

இந்த மாற்றங்களில் பெரும்பாலானவை iPhone 15 Pro மாடல்களான iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும். ஹை மாடல் பிளாக், சில்வர், ப்ளூ மற்றும் கிரே ஆகிய 4 வெவ்வேறு நிறங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 15 Pro சீரிஸ்  சிறந்த போட்டோ குவாலிட்டி உடன் ஒரு புதிய  சென்சார் டேக்நோலாஜி இருக்கும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது., புதிய ஹாப்டிக் வால்யூம் மற்றும் மியூட் பட்டன்கள் இருக்கும். ம்யூட் டோகிள் கூட ஹாப்டிக் பட்டன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ முந்தைய மாடலை விட சற்று மெலிதாக இருக்கும். டைமென்சன் பற்றி பேசினால், இது 146.47 mmநீளம், 70.46 mm வைட்மற்றும் 8.24 mm திக்னஸ் கொண்டதாக இருக்கும்.

Iphone 15

iPhone 15 Pro அறிமுக தேதி.

iPhone 15 சீரிஸ் சந்தையில் செப்டமபர்  12 அன்று அறிமுகமாகும்  என  கூறப்படுகிறது. செப்டம்பர் 15 முதல் முன்கூட்டிய ஆர்டர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன மற்றும் செப்டம்பர் 22 முதல் ஷிப்பிங் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை, எனவே துல்லியமான தகவலுக்கு, வெளியீட்டிற்கு காத்திருக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo