iphone 15 அறிமுக செய்த சந்தோசத்தில் சுமார் iPhone 14, iPhone 14 Plus போனில் 10,000 அதிரடி விலை குறைப்பு

Updated on 13-Sep-2023
HIGHLIGHTS

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய குறைப்பைக் கண்டுள்ளது

செப்டம்பர் 12 செவ்வாய்கிழமை அன்று ஆப்பிள் நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியது

hone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும்.

iphone 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய குறைப்பைக் கண்டுள்ளது. செப்டம்பர் 12 செவ்வாய்கிழமை  அன்று ஆப்பிள் நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியது, அதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும். செப்டம்பர் 12 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் இந்த அனைத்து ஐபோன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

iPhone 14 and iPhone Plus: அதிரடி  டிஸ்கவுன்ட்

ஆப்பிள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகியவற்றை முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த இரண்டு போன்களின் விலையையும் ரூ.10,000 குறைத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

iPhone 14 யின் iPhone 14 இப்போது ஆப்பிள் தளத்தில் ரூ.69,900 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 256 ஜிபி மாடலை ரூ.79,900 விலையிலும், 512 ஜிபி ரூ.99,900 விலையிலும் வாங்கலாம்.

ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி விலை இப்போது ரூ.79,990, 256 ஜிபி ரூ.89,990 மற்றும் 512 ஜிபி ரூ.1,09,990. இது தவிர, HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.8,000 கேஷ்பேக் கிடைக்கும்.

iPhone 14 சிறப்பம்சங்கள்

iPhone 14 யில்  6.1 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் சூப்பர் ரெட்டின்னா XDR இருக்கிறது இதை தவிர இதில டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் 1200 நிட்ஸ் இருக்கிறது மற்றும் இதில்  HDR  சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது 

ப்ரோ மாடல் 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளேவுடன் வந்தாலும், டிஸ்ப்ளேயின் அப்டேட் வீதம் 60 ஹெர்ட்ஸ் ஆகும். இது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் இரண்டு லென்ஸ்களும் 12 மெகாபிக்சல்கள். செல்ஃபிக்காக 12 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :