Apple iPhone 14 Pro அதிரடி சலுகை வழங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது
ஐபோன் 14 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 14 மாடலுக்கு ஜியோமார்ட் விற்பனை மையங்களில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபார் அவுட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடலுக்கு ஜியோமார்ட் விற்பனை மையங்களில் அசத்தல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. எனினும், ஜியோமார்ட் விற்பனையகத்தில் ஐபோன் 14 விலை ரூ. 77 ஆயிரத்து 900 என மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் ஐபோன் 14 (128 ஜிபி) மாடலின் விலை ரூ. 7 ஆயிரம் வரை குறைந்துவிடும். ஆப்லைன் விற்பனை மையத்தில் இந்த சலுகை வழங்கப்படும் நிலையில், ஜியோமார்ட் ஆன்லைனில் ஐபோன் 14 (128 ஜிபி) விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஐபோன் 14 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் புளூ, பர்பில், மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஐபோன் 14 (256 ஜிபி) மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்றும் 512 ஜிபி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP ஆட்டோபோகஸ் செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile