iPhone 14 சீரிஸ் புதிய மஞ்சள் நிறத்தில் அறிமுகம், இதன் டாப் அம்சம் தெரிஞ்சிக்கோங்க.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் (Yellow) நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களை புதிதாக மஞ்சள் (Yellow) நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக மிட்நைட், ஸ்டார்லைட், பிராடக்ட் ரெட், புளூ மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஐபோன் 14 ப்ரோ மாடல்களுக்கு எவ்வித புதிய நிறங்களும் அறிமுகம் செய்யப்படவில்லை. முன்னதாக ஐபோன் 13 ப்ரோ சீரிஸ் ஆல்பைன் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 69 ஆயிரத்து 999, ரூ. 79 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 999 என மற்ற நிற வேரியண்ட்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் முன்பதிவு மார்ச் 10 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை மார்ச் 14 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் சிலிகான் கேஸ்கள்: கேனரி எள்லோ, ஒலிவ், ஸ்கை மற்றும் ஐரிஸ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
iPhone 14 மற்றும் iPhone 14 Plus யின் சிறப்பம்சம்
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டது, இது (1170×2532 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 460 பிபிஐ உடன் வருகிறது. அதே நேரத்தில், ஐபோன் 14 பிளஸில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கிறது. இரண்டு ஐபோன்களின் டிஸ்ப்ளேவுடன், 1,200 நிட்களின் உச்ச பிரகாசம் மற்றும் எப்போதும் டிஸ்பிளேக்கு ஆதரவு உள்ளது.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸில் A15 பயோனிக் செயலி கொடுக்கப்பட்டுள்ளது, இது 5 கோர் GPU உடன் வருகிறது. 12 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பு மற்றும் 12 மெகாபிக்சல் முன் கேமரா இரண்டு ஐபோன்களிலும் கிடைக்கிறது. இ-சிம் மற்றும் செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆதரவும் iPhone 14 மற்றும் iPhone 14 Plus உடன் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile