iPhone 14 Series ஸ்மார்ட்போனில் 15,000,ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 சீரிஸின் கீழ், நான்கு ஐபோன்கள் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சந்தையில் உள்ளன
Flipkart ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை பெரும் தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது
நீங்கள் புதிய ஐபோன் வாங்க நினைத்தால்,மற்றும் அதற்க்கான நல்ல ஆபர் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தாள் உங்களுக்கு மிகவும் நல்ல செய்தி ஆகும். ஐபோன் 14 சீரிஸின் கீழ், நான்கு ஐபோன்கள் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சந்தையில் உள்ளன, மேலும் இந்த நான்கு போன்களும் தற்போது மிகப்பெரிய தள்ளுபடியைப் வழங்குகிறது . Flipkart ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை பெரும் தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது. அனைத்து மாடல்களிலும் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்…
iPhone 14 சீரிஸ் பிளிப்கார்ட் ஆபர்.
iPhone 14 யின் 128 GB ஸ்டோரேஜ் மாடல் தற்போது Flipkart இல் 65,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, அதன் விலை 79,900 ரூபாய். அதேசமயம் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் முறையே ரூ.75,999 மற்றும் ரூ.95,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு போன்களும் முறையே ரூ.89,900 மற்றும் ரூ.1,09,900 விலையில் வெளியிடப்பட்டது.
ஐபோன் 14 பிளஸ் பற்றி பேசுகையில், இந்த போனை தற்போது ரூ.14,901 தள்ளுபடியுடன் ரூ.74,999க்கு வாங்கலாம். அதே நேரத்தில், இந்த போனின் 256 ஜிபி மாடலை ரூ.84,999 மற்றும் 512 ஜிபி மாடல் ரூ.1,04,999 விலையில் வாங்க முடியும், அதே நேரத்தில் இந்த இரண்டு மாடல்களின் விலை முறையே ரூ.99,900 மற்றும் ரூ.1,19,900 ஆகும்.
iPhone 14 சீரிஸ் சிறப்பம்சம்.
iPhone 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே கொண்டது, இது (1170×2532 பிக்சல்கள்) ரெசொலூஷன் மற்றும் 460 பிபிஐ உடன் வருகிறது. டிஸ்ப்ளேவுடன், 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேக்கான சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. iPhone 14 இல் A15 பயோனிக் ப்ரோசிஸோர் கொடுக்கப்பட்டுள்ளது, இது 5 கோர் GPU உடன் வருகிறது. iPhone 14 ஆனது 12 மெகாபிக்சல் பேக் கேமரா செட்டப்பையும், 12 மெகாபிக்சல் பிராண்ட் கேமராவையும் கொண்டுள்ளது. e-SIM மற்றும் செட்டிலாயிட் கனெக்ட்டிவிட்டி சப்போர்ட் iPhone உடன் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile