Infinix யின் பிலிப் போனில் 5,000ரூபாய் வரையிலான அதிரடி டிஸ்கவுன்ட்

Updated on 11-Nov-2024
HIGHLIGHTS

Infinix Zero Flip 5G ஆனது தற்போது இ-காமர்ஸ் தளமான Flipkartல் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது

இது தவிர பேங்க் சலுகை மூலம் போனின் விலை ரூ.45 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கலாம்

பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5,000ரூபாய் டிஸ்கவுன்ட்

நீங்கள் 50ஆயிரத்துக்கு குறைவில் ஒரு பிலிப் போன் வாங்க நினைத்தால், இது மிக சிறந்த வைப்பக இருக்கும், ஆம், Infinix Zero Flip 5G ஆனது தற்போது இ-காமர்ஸ் தளமான Flipkartல் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இது தவிர பேங்க் சலுகை மூலம் போனின் விலை ரூ.45 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கலாம். Infinix Zero Flip 5G யில் கிடைக்கும் சலுகைகளுடன் அம்சங்கள் என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

Infinix Zero Flip 5G விலை மற்றும் ஆபர்

Infinix Zero Flip 5G யின் 8GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 49,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. அதன் பிறகு நடைமுறை விலை ரூ.44,999 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.48,200 தள்ளுபடி பெறலாம். எவ்வாறாயினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் நன்மை, பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix Zero Flip 5G

Infinix Zero Flip சிறப்பம்சம்.

Infinix Zero Flip யில் 6.9 இன்ச் முழு HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மற்றும் இதன் மறுபக்கம் 3.64 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது. இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது மேலும் இதில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் கொண்டுள்ளது. ஜீரோ ஃபிளிப் மீடியாடெக் டைமன்ஷன் 8200 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. பாதுகாப்பிற்காக, இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா செட்டப் பற்றி பேசினால், இந்த போனில் 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 50மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கஸ்டமைஸ் OS XOS 14.5 யில் வேலை செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS, NFC மற்றும் USB Type C போர்ட் ஆகியவை அடங்கும். இது 4,720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:6000mAh பேட்டரி கொண்ட iQOO Z9x 5G போனில் அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :