Infinix அதன் Infinix Zero Flip போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இது நிறுவனத்தின் முதல் க்லேம்ஷேல் ஸ்டைல் போல்டபில் போன் ஆகும், இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 8020 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் சுரஷ்ய அம்சம், விலை மற்றும் விற்பனை தகவல் பற்றி முழுசாக பார்க்கலாம் வாங்க.
Infinix Zero Flip விலை பற்றி பேசினால், 8GB + 512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 54,999ரூபாய்க இருக்கிறது, மேலும் இதன் சிறப்பு அறிமுக சலுகையாக இதை வெறும் 49,999ரூபாயில் வாங்கலாம்.இது க்லோசிம் க்ளோ மற்றும் ப்ளாக் கலரில் வருகிறது மற்றும் இந்த போனின் விற்பனை அக்டோபர் 24 அன்று ப்ளிப்கார்டில் வாங்கலாம்.
மேலும் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால், 5,000ரூபாய் வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும், இதன் மூலம் இந்த போனின் விலை 44,999ரூபாயாக வைக்கப்படுகிறது.
புதிய இன்பினிக்ஸ் பிலிப் போனில் 6.9 இன்ச் யின் முழு HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மற்றும் நீங்கள் மொபைலைத் திறக்கும்போது இந்தத் ஸ்க்ரீன் தெரியும் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. வெளிப்புறத்தில், சாதனம் 3.64-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இதை நிறுவனம் கவர் டிஸ்ப்ளே என்று அழைத்தது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டையும் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் இரட்டை சிம் (நானோ+நானோ) ஸ்லாட்டுகளுடன் வரும் Infinix Zero Flip, சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகிறது, அதில் கஸ்டம் OS XOS 14.5 லேயர் உள்ளது.
Infinix Zero Flip யில் மீடியாடேக் யின் டிமான்சிட்டி 8200 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 8GB LPDDR4X ரேம் உடன் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்குகிறது
இந்த போனின் அவுட்டர் ஸ்க்ரீனில் டுயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50எம்பி மெயின் கேமரா உள்ளது. மற்றொரு 50 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களும் 4K வீடியோவை ரெக்கார்ட் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த போனின் பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் Infinix Zero Flip ஆனது 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றின் இணைப்பைக் கொண்டுள்ளது. ஜேபிஎல் டியூன் செய்யப்பட்ட ஸ்பீக்கர்கள் போனில் கொடுக்கப்பட்டுள்ளன. கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. இது 4,720mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. போனின் எடை 195 கிராம்
இதையும் படிங்க:Vivo X200 series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும், எப்போன்னு பாருங்க