Infinix யின் புதிய போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க

Infinix யின் புதிய போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க
HIGHLIGHTS

Infinix இந்தியாவில் அதன் Infinix ZERO 40 5G அறிமுகம் செய்துள்ளது

மேலும் இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா இருக்கும்

இதை பற்றிய அம்சங்கள் மற்றும் இதன் விலை தகவலை பற்றி பார்க்கலாம்

Infinix இந்தியாவில் அதன் Infinix ZERO 40 5G அறிமுகம் செய்துள்ளது இது 6.74 இன்ச் யின் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா இருக்கும் இதை பற்றிய அம்சங்கள் மற்றும் இதன் விலை தகவலை பற்றி பார்க்கலாம்

Infinix ZERO 40 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Infinix Zero 40 5G ஆனது வயலட் கார்டன், மூவிங் டைட்டானியம் மற்றும் ராக் பிளாக் கலர்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.27,999 மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.30,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 முதல் பிளிப்கார்ட்டில் இருந்து இதைப் வாங்கலாம்.

Infinix ZERO 40 5G டாப் அம்சம்

டிஸ்ப்ளே

Infinix ZERO 40 5G யில் ஒரு 6.74 இன்ச் யின் கர்வ்ட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மற்றும் அதன் ரேசளுசன் 1080 x 2460 யின் FHD+ ரேசளுசன் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 144Hz யின் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இதில் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சனுடன் வருகிறது

ப்ரோசெசர்

Infinix ZERO 40 5G ப்ரோசெசர் பற்றி பேசுகையில் மீடியடேக் டிமான்சிட்டி 8200 அல்ட்ராமேட் 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் 12 GB ரேம் வழங்கப்படுகிறது, 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது மேலும் இது டுயல் சிம் சப்போர்ட் கொண்ட போன் ஆகும் இதை தவிர இந்த போன் லேட்டஸ்ட் Android 14 யில் வருகிறது.

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதன் பின்புறத்தில் 108MP மெயின் கேமரா மற்றும் இது ஒப்டிக்கல் ஸ்டேப்லைசெசடன் வருகிறது இதை தவிர இதில் அல்ட்ரா வைட் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மேகபிக்சல் டெப்த் சென்சாருடன் வருகிறது, மேலும் இதன் பின்புற கேமராவில் 60 fps 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். செல்பிக்கு இதுல 50 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 5000Mah பேட்டரியுடன் 45 வாட் வயர்டு மற்றும் 20 வாட் வயர்லெஸ் சார்ஜிங் தவிர, இது 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

கனெக்டிவிட்டி

இதன் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் போனில் இன்-டிஸ்ப்ளே பின்கர்ப்ரின்ட் சென்சார், யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன, அவை ஜேபிஎல் ஒலியைக் கொண்டுள்ளன. 195 கிராம் எடையுள்ள இந்த போன் IP54 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, இது தூசியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படிங்க:Samsung அதன் புதிய போனை பவர்புல் கேமரா உடன் அறிமுகம் இதன் டாப் அம்சம் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo