108 மேகபிக்சல் கொண்ட Infinix Zero 30 5G அறிமுக தேதி அறிவிப்பு

Updated on 31-Aug-2023

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Infinix யின் Infinix Zero 30 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும். இதற்கான ப்ரீ ஆர்டர்கள் செப்டம்பர் 2 முதல் தொடங்கும். இது 108 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Infinix Zero 20 5G ஐ மாற்றும். 

நிறுவனம் கூறியது என்னவென்றால், இதில் ப்ரோசெசர் MediaTek Dimensity 8020 SoC 12 GB வரையிலான  ரேம் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை சேமிப்பு கிடைக்கும். இதன் 5,000 mAh பேட்டரி 68 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது. அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பு OIS ஆதரவுடன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு அதன் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படும். அதன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன், 360 ஹெர்ட்ஸ் டச் வேரியண்டும்  மற்றும் 950 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் உடன்  வரும்.

இந்த Golden Hour மற்றும் Rome Green நிறங்களில் கிடைக்கும், இதில் கனேக்டிவிடிக்கு 5G, Wi-Fi 6 மற்றும் NFC யின் விருப்பம் இருக்கும்., Infinix Zero 30 5G இல் இரட்டை ஸ்பீக்கர்கள் வழங்கப்படும். நிறுவனம் சமீபத்தில் Infinix Hot 30 5G ஐ அறிமுகப்படுத்தியது. இது 8 ஜிபி + 8 ஜிபி ரேம் உடன் MediaTek Dimensity 6020 செயலியைக் கொண்டுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 30 5ஜி வேரியண்டின் விலை ரூ.12,499 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.13,499 ஆகவும் உள்ளது. அரோரா ப்ளூ மற்றும் நைட் பிளாக் வண்ணங்களில் இதை வாங்கலாம்.

இதன் விற்பனை பிளிப்கார்ட் மூலம் செய்யப்படுகிறது. Infinix Hot 30 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான XOS 13 இல் இயங்குகிறது. இதில் MediaTek Dimensity 6020 செயலியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் 8 ஜிபி வரை நீட்டிக்க முடியும். இதன் 6000 mAh பேட்டரி 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் Infinix ஸ்மார்ட்போன்களின் விற்பனை பாஸ்ட்  சார்ஜிங் அதிகரித்துள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :