Infinix ஒரே நேரத்தில் இரண்டு போனை அறிமுகப்படுத்தியுள்ளது 108MP கேமரா கொண்டிருக்கும்.

Updated on 29-Sep-2022
HIGHLIGHTS

Infinix இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களான Infinix Note 12 (2023) மற்றும் Infinix Zero 20 ஆகியவற்றை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Infinix Zero 20 உடன், 108-மெகாபிக்சல் டிரிபிள் கேமரா செட்அப் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன

Infinix என்ற ஸ்மார்ட்போன் பிராண்டானது அதன் இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களான Infinix Note 12 (2023) மற்றும் Infinix Zero 20 ஆகியவற்றை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பெனி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. MediaTek Helio G99 ப்ரோசிஸோர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கிறது. Infinix Zero 20 உடன், 108-மெகாபிக்சல் டிரிபிள் கேமரா செட்அப் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆகியவை ஆதரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா செட்அப் Infinix Note 12 (2023) உடன் கிடைக்கிறது. 

Infinix Zero 20 மற்றும் Infinix Note 12 (2023) யின் விலை

Infinix Zero 20 ஸ்மார்ட்போன் கிரே மற்றும் கோல்ட் என இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Infinix Note 12 (2023) மூன்று நிறம் நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. Infinix Zero 20s இன் 8GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டில் விலை $249 (கிட்டத்தட்ட ரூ. 21,000) மற்றும் 8GB RAM 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட Infinix Note 12 (2023) விலை $168 (சுமார் ரூ. 14,000).   

Infinix Zero 20 யின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் கேமரா

Infinix Zero 20 ஆனது 1,080×2,400 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் FullHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரிபெரேஸ் ரேட் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Helio G99 ப்ரோசிஸோர் மற்றும் 4,500mAh பேட்டரி உள்ளது. 45W பாஸ்ட் சார்ஜிங் பேட்டரியுடன் துணைபுரிகிறது. கனெக்ட்டிவிட்டிற்கு, போன் Wi-Fi, Bluetooth v5.0 NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. 

Infinix Zero 20 உடன் டிரிபிள் கேமரா செட்அப் உள்ளது, இதில் 108 மெகாபிக்சல்கள் கொண்ட பிரைமரி கேமரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் வருகிறது. இரண்டாம் நிலை கேமரா 13 மெகாபிக்சல்கள் அல்ட்ராவைடு மற்றும் மூன்றாவது சென்சார் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ லென்ஸ் ஆகும். செல்ஃபிக்கு 60 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. முன் கேமராவுடன் OIS மற்றும் இரட்டை ஃபிளாஷ் லைட்டுக்கான சப்போர்ட்  உள்ளது.   

Infinix Note 12 (2023) யின் ஸ்பெசிபிகேஷன் மற்றும் கேமரா

Infinix Note 12 (2023) ஆனது 6.7-இன்ச் FullHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1,080×2,400 பிக்சல் ரெசொலூஷன் உடன் வருகிறது. MediaTek Helio G99 ப்ரோசிஸோர் Infinix Note 12 (2023) இல் கிடைக்கிறது. போனுடன் 5,000mAh பேட்டரி உள்ளது மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உள்ளது. Infinix Note 12 (2023) இன் கேமரா செட்அப் பற்றி பேசுகையில், போனில் 50 மெகாபிக்சல் மூன்று பின்புற கேமரா செட்அப் உள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :