வெறும் 5,399 ரூபாயில் அசத்தலான டிசைன் உடன் Infinix SMART 7HD போன் அறிமுகம் டாப் 5 அம்சம் .

வெறும் 5,399 ரூபாயில்  அசத்தலான டிசைன் உடன் Infinix SMART 7HD போன் அறிமுகம் டாப் 5 அம்சம் .
HIGHLIGHTS

Infinix அதன் புதிய போனான Infinix SMART 7HD அறிமுகம் செய்துள்ளது

Infinix SMART 7HD முதலில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Infinix SMART 7HDபிரிமியம் டிசைனில் அறிமுகம் செய்தது.

நீங்கள் குறைந்த விலையில் போன்  வாங்க யோசித்து கொண்டிருந்தாள், Infinix  யின் இந்த போன் உங்களுக்கு சரியானதாக  இருக்கும். Infinix  அதன் புதிய போனான Infinix SMART 7HD அறிமுகம் செய்துள்ளது. Infinix SMART 7HD முதலில்  உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.. Infinix SMART 7HDபிரிமியம் டிசைனில் அறிமுகம் செய்தது.

Infinix SMART 7HD யின் விலை 

Infinix SMART 7HD யின் விலை 5,399 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இதை கருப்பு, சில்க் ப்ளூ, ஜேட் ஒயிட் மற்றும் பச்சை ஆப்பிள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை வங்கி சலுகையுடன் உள்ளது, இருப்பினும் வங்கி சலுகை குறித்த விரிவான தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை.

Infinix SMART 7HD சிறப்பம்சம்.

டிஸ்பிளே 

Infinix SMART 7HD யில் 6.6 இன்ச் முழு HD ப்ளஸ் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. அதன் ப்ரைட்னஸ் 500 நீட்ஸ் இருக்கிறது. இந்த போனுடன் 3D டெக்சிஜர் பிரிமியம் வெவ் டிசைன் பேட்டர்ன் கிடைக்கிறது.

ப்ரோசெசர் மற்றும் ரேம் ஸ்டோரேஜ் 

Infinix SMART 7HD  போனில், ஆண்ட்ராய்டு 12 Go அடிப்படையிலான XOS 12 ஆக்டாகோர் AI செயலியுடன் கிடைக்கிறது. இந்த போனில் 2GB LPDDR4X ரேம் மற்றும் 2GB விர்ச்சுவல் ரேம் வழங்குகிறது ,அதன் பிறகு அது 4GB RAM ஆக மாறும். போனில் 64 ஜிபி வரை ஸ்டோரேஜ்  கிடைக்கிறது. 

Infinix SMART 7HD யின் கேமரா 

Infinix SMART 7HD ஆனது 8 மெகாபிக்சல் இரட்டை AI பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. கேமராவுடன் டூயல் எல்இடி ஒளிரும் விளக்கும் கிடைக்கிறது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. கேமராவுடன் குறைந்த ஒளி பயன்முறையும் கிடைக்கிறது.

பேட்டரி 

Infinix SMART 7HD இல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரியும், சக்தி ஸ்டோரேஜ் மோடும் உள்ளது. பேட்டரி தொடர்பாக 50 மணிநேர பேட்டரி ஆயுள் உரிமை கோரப்பட்டுள்ளது. இது அல்ட்ரா பவர் சேமிப்பு முறையையும் கொண்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo