Infinix Smart 8 Plus ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியுடன் அறிமுகம்

Updated on 29-Jan-2024
HIGHLIGHTS

இன்பினிக்ஸ் யின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன Infinix Smart 8 Plus அறிமுகப்படுத்தியுள்ளது.

. இது ஸ்மார்ட் 8 சீரிஸின் நிறுவனத்தின் சமீபத்திய சேர்க்கை ஆகும்

Infinix Smart 8 Plus யின் விலை இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

இன்பினிக்ஸ் யின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன Infinix Smart 8 Plus அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட் 8 சீரிஸின் நிறுவனத்தின் சமீபத்திய சேர்க்கை ஆகும். ஃபோனில் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 500 நிட்கள் வரை பிரகாசம் உள்ளது. இது 90Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது. இது AI கேமரா. இதனுடன் LED ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அனைத்து தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Infinix Smart 8 Plus Specifications

Infinix Smart 8 Plus ஆனது பஞ்ச் ஹோல் டிசைனுடன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 720 x 1612 பிக்சல்கள் கொண்ட HD Plus ரேசளுசன் கொண்டுள்ளது இந்த போனில் 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இதன் ப்ரைட்னாஸ் 500 நிட்கள். போனின் பின்புறத்தில் உள்ள 50 மெகாபிக்சல் பிரதான கேமரா AI லென்ஸ் வடிவில் வருகிறது. செல்ஃபிக்காக 8 மெகாபிக்சல் கேமராவை இந்த போன் கொண்டுள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஹீலியோ ஜி 36 சிப்செட்டுடன் இந்த போன் வருகிறது. மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜ அதிகரிக்கும் வாய்ப்பையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த போன் Android 13 Go உடன் வருகிறது. பாதுகாப்புக்காக ஒரு பக்கம் எதிர்கொள்ளும் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. இந்த போனில் 6000 mAh பெரிய பேட்டரி உள்ளது. இதனுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. அதன் பரிமாணங்கள் 163.65 x 75.7 x 8.95 mm மற்றும் எடை 240 கிராம் ஆகும்.

இதையும் படிங்க:Google Pixel 8 மற்றும் 8 Pro புதிய கலர் வேரியன்ட் அறிமுகம்

Smart 8 Plus price

Infinix Smart 8 Plus யின் விலை இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. இது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. டிம்பர் பிளாக், கேலக்ஸி ஒயிட் மற்றும் ஷைனி கோல்ட் போன்ற கலர் வகைகளில் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :