5000Mah பேட்டரியுடன் ஜியோ ஆபருடன் அறிமுகமாகும் Infinix யின் புதிய ஸ்மார்ட்போன்

Updated on 30-Jul-2021
HIGHLIGHTS

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்த விவரங்கள் கசிந்தன

ஜியோ பயனர்கள் சிறந்த கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம்

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

பட்ஜெட் பிரிவில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய இன்பினிக்ஸ் பிராண்ட், மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் SMART 5A  அடுத்த வாரம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இது குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடியதாக இருக்கும். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது ஜியோவுடனான பிரத்யேக கூட்டாண்மை கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மற்றும் இந்த சிறப்பு சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்களின் பணம் சேமிக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேக ஜியோ சலுகைகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 550 வரையிலான கேஷ்பேக் பெறலாம்.
 
புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ மாடலில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் ஸ்கிரீன், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் வேவ், குயிட்சல் சியான் மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

 இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஜியோ சலுகையை பொருத்தவரை ரூ. 550 கேஷ்பேக் தொகையை வாடிக்கையாளர்கள் இருவழிகளில் பெற முடியும். 

– ஜியோ POS அதிகாரப்பூர்வ விற்பனையாளரிடம் வாங்கும் போது, வாடிக்கையாளரின் சாதனத்தில் ஜியோ சிம் லாக் செய்யப்பட்டு, உடனடியாக ரூ. 550 தள்ளுபடி பெறலாம்.

– ப்ளிப்கார்ட் அல்லது இதர தளங்களில் ஜியோ சலுகை பற்றி அறிந்துகொள்ளாமல் ஸ்மார்ட்போனினை வாங்கி இருந்தால், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட மைஜியோ செயலி மூலம் 15 நாட்களுக்குள் கேஷ்பேக் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

– இந்த சலுகையை முழுமையாக பெற வாடிக்கையாளர்கள் சாதனத்தில் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் ஆக குறைந்தபட்சம் 30 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும். 

– சாதனத்தை வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டால், வாடிக்கையாளர்கள் தங்களின் UPI விவரங்களை கொடுத்து ரூ. 550 தொகையை வங்கி கணக்கிற்கு நேரடியாக பெற்றுக் கொள்ள முடியும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :