Infinix இந்திய சந்தையில் விரைவில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுக செய்ய தயார் செய்துள்ளது. பிராண்ட் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Infinix Note 40X அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வடிவமைப்புடன், ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் Note 40 தொடரின் ஐந்தாவது வெர்சனாக இருக்கும், இதில் இதுவரை Infinix Note 40, Infinix Note 40 Pro மற்றும் Infinix Note 40 Pro+ வகைகள் உள்ளன. இதை பற்றி பல தகவல் தெருஞ்சிக்கலம்.
Infinix Note 40X ஆகஸ்ட் 5 அறிமுகமாகும். இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், இந்த போனில் பிளேட் பிரேம் மற்றும் பேக் பேனலில் ஒரு சர்க்குலர் கேமரா மாடலுடன் வருகிறது கலர் விருப்பங்களைப் பற்றி பேசுகையில், இது ஸ்டார்லிட் பிளாக், லைம் கிரீன் மற்றும் பாம் ப்ளூ ஆகியவற்றில் கிடைக்கும், அவற்றில் ஒன்று க்ரேடியன்ட் பினிஷ் கொண்டிருக்கும். செக்யுரிட்டிக்காக இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்த போனின் விலை கிட்டத்தட்ட இந்தியாவில் 10,000 ருபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது இது ஸ்டார்லிட் பிளாக், லைம் கிரீன் மற்றும் பாம் ப்ளூ ஆகியவற்றில் கிடைக்கும்
Infinix Note 40X ஆனது பஞ்ச் ஹோல் கட்அவுட் மற்றும் டைனமிக் போர்ட் அம்சத்துடன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இது 108 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டிருக்கும். இதில் முன் பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கெமர இருக்கும். மற்றும் இதில் AI அம்சத்துடன் வருகிறது
Infinix Note 40X ஆனது DTS ஆடியோவுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வழங்கப்படும், இது சிறந்த கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது. இருப்பினும், Infinix Note 40X யின் பிற அம்சங்களான ப்ரோசெசர் , ரேம், ஸ்டோரேஜ் கான்பிக்ரேசன் மற்றும் பேட்டரி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: iQOO Z9s Series மிகவும் பவர் புல் ஸ்மார்ட்போன் ஆன அடுத்த மாதம் என்ட்ரி