இன்பினிக்ஸ் அதன் Infinix Note 40 Pro 5G சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, இதில் Note 40 Pro 5G மற்றும் Note 40 Pro+ 5G ஆகியவை அடங்கும். இந்தியாவின் முதல் வயர்லெஸ் காந்த சார்ஜிங் தீர்வுடன், Note 40 Pro 5G தொடரில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. Infinix Note 40 Pro 5G மற்றும் Note 40 Pro+ 5Gயின் அம்சங்கள் மற்றும் , விலை பற்றிய தகவல் விரிவாக பார்க்கலாம்.
இதன் விலையை பற்றி பேசினால், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.21,999. அதேசமயம் Infinix Note 40 Pro+ 5G யின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வகையின் விலை ரூ.24,999. இன்று மதியம் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட்டில் அளிபர்ட் விற்பனை ஆரம்பமாகிறது, அலிபர்ட் கீழ் infinix Note 40 Pro 5G தொடரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.4999 மதிப்பிலான MagKitஐப் பெறலாம் இதில் MagCase மற்றும் MagPower பவர் பேங்க் அடங்கும். வாடிக்கையாளர்கள் Inifnix Note 40 Pro 5G தொடர்களை Obsidian Black, Titan Gold மற்றும் Vintage Green போன்ற மூன்று கலர் விருப்பங்களில் வாங்கலாம்.
Infinix Note 40 Pro+ 5G மற்றும் Note 40 Pro 5G யின் இந்த இரு போனிலும் 6.78-இன்ச் FHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz, 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் 2160Hz PWM டிம்மிங் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது
இதை தவிர இந்த இரு போனிலும் MediaTek Dimensity 7020 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது Note 40 Pro+ யில் 100W சார்ஜிங் கேப்பசிட்டியுடன் வருகிறது மேலும் இதில் 4600mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, அதேசமயம் Note 40 Pro ஆனது 45W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Note 40 Pro 5G தொடர் 20W Magnetic Mag Case, Mag Pad மற்றும் Mag Power (வயர்லெஸ் சார்ஜிங் பவர்பேங்க்) வழியாக காந்த சார்ஜிங் தீர்வுடன் வயர்லெஸ் சார்ஜிங் பவர் வழங்குகிறது. 20W மேக் பவர் மற்றும் 15W மேக் பேட் Qi & EPP ஸ்டேனடர்ட் ப்ரோடோக்கள் உடன் வேலை செய்கின்றன.
கேமராவை பற்றி பேசுகையில் Infinix Note 40 Pro சீரிச்ல் OIS சப்போர்டுடன் 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. இரண்டு போன்களிலும் செல்ஃபிக்களுக்காக 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. நோட் 40 ப்ரோ+ 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5ஜி ஆகியவை ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14 தனிப்பயன் ஸ்கின்னில் இயங்குகின்றன. நோட் 40 ப்ரோ 5ஜி தொடரில் பிரத்யேக பவர் மேனேஜ்மென்ட் சிப், இன்ஃபினிக்ஸ் சீட்டா எக்ஸ்1 உள்ளது, இது முதல் ஆண்ட்ராய்டு காந்த வயர்லெஸ் சார்ஜிங் தீர்வாகும்.
Infinix Note 40 Pro சீரிசில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது Note 40 Pro+ 5G யில் 12GB RAM இருக்கிறது இதை 24GB RAM வரை அதிகரிக்க முடியும். அதுவே Note 40 Pro யில் 8ஜிபி ரேம் உள்ளது, இதை 16ஜிபி வரை அதிகரிக்கலாம் ஸ்மார்ட்போனில் JBL இன் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன, இது 360° சமச்சீர் சவுண்டை வழங்குகிறது. infinix மூன்று வருட பாதுகாப்பு பேட்ச் அப்டேட்கள் மற்றும் இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களுக்க்ன உறுதியளிக்கிறது. ஸ்மார்ட் ஹோம் ஒருங்கிணைப்புடன், Infinix Note 40 Pro 5G தொடர் அதன் IR ரிமோட் அம்சத்துடன் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் நிர்வகிக்க முடியும், இது தனித்துவமான அம்சங்களையும் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. இது IP53 ரேட்டிங் மற்றும் NFC சப்போர்டுடன் வருகிறது
இதையும் படிங்க :.Vodafone idea குறைந்த விலையில் கிடைக்கும் Extra 25% Data