Infinix மற்றொரு ஸ்மார்ட்போன் Infinix Note 40 5G போன் இந்தியாவில் அறிமுகம், இது மிட் ரேன்ஜ் செக்மண்டில் அறிமுகமாகியது, இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இதில் Mag சார்ஜிங் வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது மேலும் இதிலிருக்கும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Infinix Note 40 5G போன் இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது அப்சிடியன் பிளாக் மற்றும் டைட்டன் கோல்டு நிறங்களில் கிடைக்கும், இதன் விலை 19999 ரூபாய். இந்த போனின் விற்பனை ஜூன் 26 முதல் தொடங்கும், இதை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம். எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ.2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் கிடைக்கும். 2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறலாம். வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில், நிறுவனம் இந்த சாதனத்துடன் ரூ.1999 மதிப்புள்ள Infinix MagPad ஐ இலவசமாக வழங்குகிறது.
டிஸ்ப்ளே
Infinix Note 40 5G ஆனது 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் FullHD Plus ரேசளுச்ன் வழங்குகிறது. ஹை ப்ரைட்னஸ் 1300 நிட்கள் மற்றும் PWM டிமிங் 2160Hz. இது கண்களில் குறைந்த விளைவைக் கொண்டிருக்கிறது.
ப்ரோசெசர்
இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், Infinix Note 40 5G யில் MediaTek இன் Dimension 7020 செயலி வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதில் புதிய Infinix ஃபோன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகிறது.
ரேம் ஸ்டோரேஜ்
இதை தவிர இதில் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இது 8GB LPDDR4X RAM உடன் இதில் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 256 ஜிபி. ஆகும் மேலும் இதில் SD கார்டு மூலம் ஸ்டோரேஜ் 1 TB வரை அதிகரிக்கலாம்.
கேமரா
இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் இதன் மெயின் பின்புற கேமரா 108 மெகாபிக்சல். இதனுடன் எம்பி மேக்ரோ மற்றும் டெப்த் லென்ஸ் உள்ளது. முன்புறத்தில் செல்பிக்கு 32 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
இந்த போனில் 5 000Mah பேட்டரி உள்ளது. இது 33 வாட் வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் 15W வயர்லெஸ் MagSafe சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
சவுன்ட் சிறப்பாகச் செய்ய, நிறுவப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் JBL யின் சவுண்டை கொண்டுள்ளன. இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் உள்ளன
இதையும்படிங்கVivo Y58 5G இந்தியாவில் அறிமுகம் இத ன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகோக