இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 எனும் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனில் 20 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் சாஃப்ட் எல்இடி பிளாஷ் மற்றும் ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் சான்ட்ஸ்டோன் பிளாக் மற்றும் பிரஷ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 சிறப்பம்சங்கள்:
– 5.65 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D ஃபுல் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, F/2.0 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0 அப்ரேச்சர், டூயல் எல்இடி பிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் எஸ்3 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை பிப்ரவரி 12-ம் தேதி துவங்க இருக்கிறது.