32MP செல்ஃபி கேமரா கொண்ட Infinix போன் முதல் முறையாக விறபனைக்கு வருகிறது

32MP செல்ஃபி கேமரா கொண்ட Infinix போன் முதல் முறையாக விறபனைக்கு வருகிறது
HIGHLIGHTS

Infinix HOT 40i இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது,

32MP செல்ஃபி கேமரா கொண்ட முதல் போன் ஆகும்,

இன்று அதாவது 21 பிப்ரவரி முதல் முறையாக 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான Flipkart யில் விற்பனைக்கு வருகிறது,

Infinix HOT 40i இந்தியாவில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது, 32MP செல்ஃபி கேமரா கொண்ட முதல் போன் ஆகும், இந்த போன் இன்று அதாவது 21 பிப்ரவரி முதல் முறையாக 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான Flipkart யில் விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த போனின் விலை மற்றும் ஆபர் தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Infinix HOT 40i யின் விலை மற்றும் ஆபர்

Infinix HOT 40i இந்த போன் 8GB + 256GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதன் விலை 9,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது ஆனால் அறிமுக சலுகையாக infinix Axis, HDFC, ICICI, SBI Bank கிரெடிட் மற்றும் டெபிட் கார்டில் வாங்கினால் ரூ,1,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Infinix Hot 40i சிறப்பம்சம்

இந்த போனில் 6.6-இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் ரெப்ராஸ் ரேட் 90Hz ஆகும். இந்த ஸ்மார்ட்போன் IP53 ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் டிசைன் பற்றி பேசுகையில் இதில் பேஸ் அனலாக் திறப்பதற்கான மேஜிக் ரிங், பேக்ரவுண்ட் கால்கள் சார்ஜிங் அனிமேஷன், சார்ஜ் மெமரி ஆகிவற்றை வழங்குகிறது.

இந்த போனில் ப்ரோசெசருக்கு இந்த ஸ்மார்ட்போனில் UniSOC T606 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான XOS 13 யில் வேலை செய்கிறது. இந்த 8ஜிபி + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (16ஜிபி ரேம்) மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இதை மைக்ரோ SD கார்ட் வழியாக 2டிபி வரை அதிகரிக்க முடியும்.

இதையும் படிங்க: WhatsApp AI-ஜெனரேட்டட் மற்றும் Deep fake தடுக்க இந்தியாவில் ஹெல்ப்லைன் கொண்டு வருகிறது

Infinix Hot 40i கேமரா பற்றி பேசுகையில் இதில் பின் கேமரா 50MP + AI Lens கொண்ட கேமராவும் செல்ஃபி க்கு 32MP கொடுக்கப்பட்டுள்ளது

இந்த போனில் பேட்டரிக்கு 5000mAh மற்றும் பாஸ்ட் சார்ஜிங் 18W கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo