Infinix Hot 40 அறிமுகத்திற்க்கு முன்பே பல தகவல் லீக்,16GB ரேம் கொண்டிருக்கும்
Infinix ஸ்மார்ட்போன் சந்தையில் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது.
Infinix Hot 40i சமீபத்தில் சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Infinix Hot 40 வெளியீட்டு தேதி டிசம்பர் 9 அன்று திட்டமிடப்பட்டுள்ளது,
Infinix ஸ்மார்ட்போன் சந்தையில் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனம் தனது போன்களின் பிரீமியம் அம்சங்களை குறைந்த விலையில் வழங்க முயற்சிப்பதால் சந்தையில் ஒரு இடத்தைப் பிடித்து வெற்றியடைந்துள்ளது. Infinix Hot 40i சமீபத்தில் சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 40 சீரிஸை ஆப்பிரிக்க சந்தையிலும் அறிமுகப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் இப்போது நடந்து வருகின்றன. அதற்கு டிசம்பர் 9-ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, போனின் லைவ் போட்டோக்கள லீக் ஆகியுள்ளது Infinix Hot 30 யின் இந்த வாரிசு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Infinix Hot 40 வெளியீட்டு தேதி டிசம்பர் 9 அன்று திட்டமிடப்பட்டுள்ளது, அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் நேரடி படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. Tipster Paras Guglani, அதன் லைவ் ரெண்டர்களைப் பகிர்ந்துள்ளார். கர்வ்ட் எட்ஜ்கள் போனில் தெரியும், கேமரா மாட்யுல் செவ்வகமாகத் தோன்றும். போனில் பேட்டரி பவர் மற்றும் பாஸ்ட் சார்ஜ் செய்வதும் படத்தில் தெரியும், இது பெட்டியில் தெரியும். இது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதனுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் குறிப்பிடப்பட்டுள்ளது.
infinix Hot 40 live images revelaed key specs! https://t.co/DpO8NpoiH0#InfinixHot40 #Infinix pic.twitter.com/KCe61ttPiP
— Paras Guglani (@passionategeekz) November 27, 2023
Infinix Hot 40 சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில் 16GB வரையிலான ரேம் இருக்கும் மாடும் இதில் 8 GB வெர்சுவல் ரேம் அடங்கி இருக்கும். இதில் 128 GB ஸ்டோரேஜை பெறலாம். இதில் ப்ரோசெசர் MediaTek Helio G88 என கூறப்படுகிறது. இது தவிர, 90Hz ரெப்ராஸ் ரேட் கொண்டதாகக் கூறப்படும் போனில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ரேசளுசன் பற்றிய தகவல்கள் இங்கே தெரியவில்லை. ஆனால் கேமராவைப் பற்றிய முக்கிய விஷயங்கள் அறியப்படுகின்றன.
இதையும் படிங்க: Tecno Spark Go 2024 தகவல் Amazon யில் லீக் செய்யப்பட்டுள்ளது
Infinix Hot 40 யின் கேமரா சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த ஃபோனின் பின்புற ப்ரைமரி கேமராவாக 50 மெகாபிக்சல் சென்சார் கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது. இதில் சூப்பர் நைட் போட்டோகிராபி வசதி இருக்கப் போகிறது என்பது சிறப்பு. அதாவது குறைந்த வெளிச்சத்தில் சிறந்த போட்டோக்களை ஃபோன் எடுக்க முடியும். மீதமுள்ள போன்களின் கேமரா பர்போமான்ஸ் எப்படி இருக்கும் என்பது அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும். டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, நிறுவனம் விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile