Infinix Hot 10 Play ஸ்மார்ட்போனின் புது 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. புது மெமரி வேரியண்டை தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே அம்சங்கள்
– 6.82 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
– 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– XOS 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
– டெப்த் சென்சார்
– 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அதன்படி இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே மாடலில் 6.82 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் XOS 7.0 ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே விலை தகவல்
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 7 டிகிரி பர்பில், ஏஜியன் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் புதிய 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.