Infinix GT 20 Pro அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் என்ன பக்கலாம்
Infinix GT 20 Pro ஸ்மார்ட்போன் செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,
, இந்த போன் கேமிங் பிரியர்களுக்கு கொண்டு வரப்பட்டது.
Infinix ஃபோன் சைபர் மெக்கா வடிவமைப்பைக் கொண்டுள்ளது
Infinix GT 20 Pro ஸ்மார்ட்போன் செவ்வாய்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த போன் கேமிங் பிரியர்களுக்கு கொண்டு வரப்பட்டது.புதிய Infinix ஃபோன் சைபர் மெக்கா டிசைனை கொண்டுள்ளது மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. GT 20 Pro ஆனது MediaTek இன் Dimensity 8200 செயலியைக் கொண்டுள்ளது (Infinix GT 20 Pro soc). இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது (Infinix GT 20 Pro Camera), இதன் முக்கிய சென்சார் 108 மெகாபிக்சல்கள். நாங்கள் கூறியது போல், இது ஒரு கேமிங் சென்ட்ரிக் சாதனம் மற்றும் அதில் ஒரு டர்போ சிப் நிறுவப்பட்டுள்ளது. இந்த போன் கடந்த மாதம் சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Infinix GT 20 Pro விலை மற்றும் விற்பனை தகவல்
Infinix GT 20 Pro யின் விலை மற்றும் பேங்க் ஆபர் பற்றி பேசினால்,, இது 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 22,999ரூபாயாக இருக்கிறது,, அதுவே இதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியடின் விலை பேங்க் ஆபருக்கு பிறகு 24,999 ரூபாயாகும். இது Mecha Blue, Mecha Orange மற்றும் Mecha Silver கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த போன் மே 28 முதல் Flipkartல் விற்பனை செய்யப்படும்.
Infinix GT 20 Pro ஆனது Infinix GT 10 Pro ஐ மாற்றியமைக்கும், இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.19999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Infinix GT 20 Pro டாப் அம்சங்கள்
Infinix GT 20 Pro யில் 6.78 இன்ச் யின் full-HD+ (1,080×2,436 पिक्सल्स) LTPS AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது டிஸ்ப்ளே ரெப்ராஸ் ரேட்டுக்கு 60Hz, 120Hz மற்றும் 144Hz இடையே மாறலாம். டிஸ்ப்ளே 2304Hz PWM ப்ரீகுவன்ஷி மற்றும் 1,300 nits ஹை பரைட்னஸ் வழங்குகிறது.
Infinix GT 20 Pro ப்ரோசெசர்
Infinix GT 20 Pro ஆனது MediaTek யின் Dimensity 8200 Ultimate ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5X ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் Pixelworks X5 Turbo கேமிங் சிப்பும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது இந்த ஃபோனில் X பூஸ்ட் கேமிங் மோட் உள்ளது, இது 90fps வேகத்தில் அதிக கேம்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
Infinix GT 20 Pro ஒப்பரேட்டிங் சிஸ்டம்
டூயல் சிம் (நானோ) ஸ்லாட்டுகளுடன் வரும் இன்ஃபினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான XOS 14 யில் இயங்குகிறது.
புதிய Infinix பயனர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களுடன் இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
Infinix GT 20 Pro Camera
Infinix GT 20 Pro மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது. முக்கிய சென்சார் 108 மெகாபிக்சல் சாம்சங் HM6 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வழங்குகிறது. மேலும் 2 மெகாபிக்சல்கள் கொண்ட இரண்டு சென்சார்கள் போனில் பொருத்தப்பட்டுள்ளன. ஜிடி 20 ப்ரோவில் 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. GT 20 Pro ஆனது RGB LED வரிசை மற்றும் பின்புறத்தில் C வடிவ ரிங் கொண்டுள்ளது. இதைப் பார்த்தாலே நத்திங் போன்கள்தான் ஞாபகத்துக்கு வரும். பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள LED இன்டர்பேஸ் 8 கலர் சேர்க்கைகள் மற்றும் 4 லைட்டிங் எபக்டில் வெளிப்படுகின்றன.
Infinix GT 20 Pro Battery
Infinix GT 20 Pro ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த போனின் எடை 194 கிராம். ஆகும்
Infinix GT 20 Pro கனெக்டிவிட்டி
Infinix GT 20 Pro 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் NFC, FM ரேடியோ, ஜிபிஎஸ், USB டைப்-சி போர்ட், OTG, ப்ளூடூத் ஆகியவை அடங்கும். இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. JBL யிலிருந்து இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.
இதையும் படிங்க :Xiaomi அறிமுகம் செய்தது புதிய TV FHD ரேசளுசன் கொண்டிருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile