ஜியோபோனுக்கு போட்டியாக ஐபால் ஆசான் 4 இந்தியாவில் அறிமுகம்..!
இந்தியாவில் இந்த ஐபால் ஆசான் 4 மொபைல் போன் விலை வெறும் ரூ.3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது..
ஐபால் நிறுவனம் தனது ஆசான் சீரிஸ் புதிய மொபைல்போனினை இந்தியாவில் ஜியோபோனுக்கு போட்டியாக அறிமுகம் செய்துள்ளது. ஆசான் 4 என அழைக்கப்படும் புதிய மொபைல் போன் பெரிய திரை கொண்டிருப்பதால் முதியோருக்கு பயன்படுத்த வசதியாக இருக்கும் என ஐபால் தெரிவித்துள்ளது.
பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி மற்றும் டாக்கிங் கீபேட் உள்ளிட்டவை புதிய மொபைல் போனில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மொபைல் வைத்திருப்போர் தவிர மற்றவர்கள் இதில் தங்களது சிம் கார்டை செருகினால் ஏற்கனவே மொபைலில் செட் செய்யப்பட்டு இருக்கும் மொபைலுக்கு எச்சரிக்கை செய்யும்.
ஐபால் ஆசான் 4 அம்சங்கள்:
– 2.31 இன்ச் டிஸ்ப்ளே
– பெரிய பட்டன் கொண் கீபேட்
– பிரெய்லி மற்றும் டாக்கிங் (பேசும்) கீபேட்
– எஸ்.ஓ.எஸ். அம்சம்
– டூயல் சிம் ஸ்லாட்
– மைக்ரோ எஸ்டி மூலம் 32 ஜிபி வரை மெமரி
– எஃப்.எம். ரேடியோ
– 1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைவூட்டும் படி மெடிசின் ரிமைன்டர் வசதி சிறப்பான ஆடியோ தரம் இருப்பதால் காது கேட்பதில் சிறு கோளாறு இருப்பவர்களுக்கும் தெளிவாக கேட்க செய்யும் வகையில் ஹியரிங் ஏய்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பத்து இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் ஆசான் 4 மொபைல் போன் இந்தியாவில் ரூ.3,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile