Huawei நிறுவனம் இந்தியாவில் Y9 2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் HD . பிளஸ் டிஸ்ப்ளே, கொடுக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம், மற்றும் இதன் கேமரா பற்றி பேசினால் பின் புறத்தில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், 2 எம்.பி. செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது அதே முன் புறத்தில் பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. செகண்டரி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இரு கேமரா சென்சார்களிலும் AI . அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. வளைந்த 3D ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் Y9 2019 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000 Mah . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது..
Huawei Y9 2019 சிறப்பம்சங்கள்
– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 Mah பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை
Huawei Y9 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் Y9 2019 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளூசிவ் விற்பனையுடன் ஜனவரி 15 விற்பனைக்கு வருகிறது.