Huawei Pocket S போல்டப்பில் ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ரகன் 778G SoC ப்ரோசெசருடன் அறிமுகம்.

Updated on 03-Nov-2022
HIGHLIGHTS

ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய ஹூவாய் பாக்கெட் S மாடலில் 6.9 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய பிலெக்சிபில் ஸ்கிரீன், 1.04 இன்ச் அளவில் வெளிப்புற AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் நிறுவனம் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூவாய் அறிமுகம் செய்த P50 பாக்கெட் ப்ளிப் போனினை விட குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் பாக்கெட் S மாடலில் 6.9 இன்ச் FHD+ மடிக்கக்கூடிய பிலெக்சிபில் ஸ்கிரீன், 1.04 இன்ச் அளவில் வெளிப்புற AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூவாய் பாக்கெட் S சிறப்பம்சங்கள் 

6.9 இன்ச் 2790×1188 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் 

128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி

ஹார்மனி ஒஎஸ் 3.0 

டூயல் சிம் 40MP ட்ரூ-க்ரோமா கேமரா 

13MP அல்ட்ரா வைடு கேமரா

 10.7MP செல்பி கேமரா

இத்துடன் ஸ்னாப்டிராகன் 778 4ஜி சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 40MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 10.7MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ஹூவாய் பாக்கெட் S மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 40 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஹூவாய் பாக்கெட் S மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், பாரஸ்ட் சில்வர், மிண்ட் கிரீன், பின்க், ப்ரிசம்ரோஸ் கோல்டு மற்றும் ஐஸ் க்ரிஸ்டல் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 5888 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 68 ஆயிரத்து 010 என துவங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :