Huawei P30 Pro மற்றும் P30 Lite இந்தியாவில் விலை Rs 71,990 ரூபாயில் அறிமுகமானது

Huawei P30 Pro மற்றும் P30 Lite  இந்தியாவில் விலை Rs 71,990 ரூபாயில்  அறிமுகமானது
HIGHLIGHTS

Huawei  இன்று அதன் P30 Pro மற்றும் P30 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு  ஸ்மார்ட்போன்களும்  அமேசான் இந்தியாவில்  விற்பனை செய்ய இருக்கிறது. இந்த P30 Pro  ஸ்மார்ட்போனின்  விலை Rs 71,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. அதுவே P30 Lite  ஸ்மார்ட்போனின்  விலை வெறும் Rs 19,990 மற்றும் Rs 22,990 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ  பயனர்கள் இந்த சாதனத்தை  வாங்கினால்  Rs 2200  கேஷ்பேக்  வழங்கப்படும்.மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில்  நோ  கோஸ்ட் EMI  வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் P30 Pro  உடன் அதிகபட்சமாக  Rs 2000 பணம்  செலுத்தினால்  Huawei Watch GT பெறலாம் அதன் விலை  Rs 15,990 இருக்கிறது.

Huawei P30 Pro

Huawei P30 Pro வில் உங்களுக்கு  6.47 இன்ச் முழு HD (1080×2340 பிக்சல் ) OLED டிஸ்பிளே  இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 உடன் வருகிறது  மேலும் இந்த சாதனத்தில்  இன்  டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்  சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த  Huawei P30 Pro வில் 8ஜிபி  ரேம் மற்றும் 256GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது  இந்த சாதனம் மாலி- G76 GPU ஆக்டா-கோர் கிரின் 980 ப்ரோசெசர் பயன்படுத்தப்பட்டுள்ளது  . ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையில் EMUI 9.1 இல் போனில் வேலை செய்கிறது.

கேமரா பற்றி பேசினால்  இதில் கேமரா ஜெர்மனி நாட்டின் Leica நிறுவன ஆதரவுடன் P30 ப்ரோ போனில் வழங்கப்பட்டுள்ள குவாட் கேமரா செட்டப்பில் பிரைமரி சென்சாராக சூப்பர் செப்க்ட்ரம் 40 மெகாபிக்சல் , அல்ட்ரா வைட் ஏங்கிள் 20 மெகாபிக்சல் சென்சார் கேமரா, டெலிபோட்டோ கேமராவுக்கு என 8 மெகாபிக்சல் சென்சார் (5X zoom) உடன் வழங்கப்பட்டு, கூடுதலாக LED ஃபிளாஷ் கீழ் பகுதியில் Time-of-Flight (TOF) கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கு என பிரத்தியேகமான 32 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போனினை இயக்குவதற்கு என 40 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,200 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி கொண்டு ஹூவாய் பி 30 புரோ போன் இயக்கப்படுகின்றது.

Huawei P30 Lite

Huawei P30 Lite யின் பெயரில் இந்த சாதனத்தில் 6.15 இன்ச் HD+ LCD டிஸ்பிளே  கொண்டுள்ளது மற்றும் இந்த டிஸ்பிளே வ்ஸ்பெக்ட்  ரேஷியோ 19:5:9  இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  வாட்டர்  ட்ராப்  நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது 

ப்ரோசெசர்  பற்றி பேசினால்  P30 Lite கிரீன் 710 ப்ரோசெசர் மற்றும் 4GB/6GB ரேம் உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  128GB  ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது மேலும் இதன்  ஸ்டோரேஜை  மைக்ரோ  SD  கார்ட் வழியாக  அதிகரிக்கலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை  அடிப்படையின் கீழ் EMUI 9 UI  அறிமுகம் செய்யப்பட்டது சாதனம் சார்ஜ் செய்ய மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்கான ஒரு USB வகை- C போர்ட் மற்றும் சாதனம் 3,340 Mahபேட்டரி கிடைக்கிறது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo