மூன்று பிரைமரி கேமரா மற்றும் 24MP செல்பி கேமராவுடன் HUAWEI P30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Updated on 10-Apr-2019
HIGHLIGHTS

Huawei  அதன் P30 Pro மற்றும் P30 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது Huawei P30 Lite யின் பெயரில் இந்த சாதனத்தில் 6.15 இன்ச் HD+ LCD டிஸ்பிளே  கொண்டுள்ளது மற்றும் இந்த டிஸ்பிளே வ்ஸ்பெக்ட்  ரேஷியோ 19:5:9  இருக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  வாட்டர்  ட்ராப்  நோட்ச்  வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

HUAWEI P30 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி.  / 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3340 Mah .பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3340Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.

விலை  மற்றும் விற்பனை 
ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பியல் வைட் மற்று் பீகாக் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :