digit zero1 awards

ஹூவாய் Nova 3 ஜூலை 26,அன்று அமேசானில் எக்ஸ்க்ளுசிவாக கிடைக்கும்..!

ஹூவாய் Nova 3 ஜூலை 26,அன்று அமேசானில் எக்ஸ்க்ளுசிவாக  கிடைக்கும்..!
HIGHLIGHTS

ஹூவாய் நிறுவனத்தின் நோவா ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் நோவா சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 26-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இத்தகவல் அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சிறப்பு பேனர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் நோவா 3 மற்றும் நோவா 3i ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ஹூவாய் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

https://static.digit.in/default/7aa96a5b3cc5d9350478152c08bb7a0c698cd0f2.jpeg

மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் GPU டர்போ சப்போர்ட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் ஹூவாய் தெரிவித்திருந்தது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

அமேசான் வெப்சைட்டில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெறாத நிலையில், சில அம்சங்கள் சார்ந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் முதல் இரண்டு படங்களில் Capture Your Moments மற்றும் For You and Your View என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது. 

இதை வைத்து பார்க்கும் போது புதிய ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் ஹூவாய் 3D க்யூமோஜி அம்சம் வழங்கப்படுகிறது. இது ஆப்பிளின் அனிமோஜி போன்ற அம்சம் ஆகும். 

ஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனில் கிரின் 970 சிப்செட், மாலி-G72 MP12 GPU வழங்கப்படலாம் என்றும் இது ஹூவாயின் GPU டர்போ தொழில்நுட்பம் கொண்ட முதல் ஹூவாய் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo