Huawei யின் Huawei MatePad Pro சீரிஸ் யின் புதிய மாடல் அறிமுகம், இது 13.2 இன்ச் டிஸ்ப்ளேவில் வருகிறது. நிறுவனம் இதை முதன்மை டேப்லெட்டாக அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், சீனாவில் நிறுவனம் செப்டம்பர் மாதத்திலேயே இதை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது அதன் உலகளாவிய வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த டேபிள் OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 1000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. Samsung Galaxy Tab S9 Ultraக்கு போட்டியாக இருக்கும் என்று கூறலாம். இது OLED பேனல் கொண்ட உலகின் முதல் டேப் என்று கூறப்படுகிறது. டிஸ்ப்ளே 2,880 x 1,920 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. அதன் விலை மற்றும் அனைத்து சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ஐரோப்பாவில் Huawei MatePad Pro 13.2 யின் விலை 999 யூரோ (தோராயமாக ரூ. 89,800), இது அதன் ஆரம்ப 12 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை என்று கூறப்படுகிறது. இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் 1199 யூரோக்கள் (தோராயமாக ரூ. 1,07,000)க்கு வருகிறது. இது ஸ்மார்ட் மேக்னடிக் கீபோர்டுடன் வருகிறது, இதன் விலை 199 யூரோக்கள் (சுமார் ரூ. 17,900), எம்-பென்சிலின் விலை 99 யூரோக்கள் (ரூ. 8,907). ஜனவரி 8 முதல் புக்கிங் செய்யலாம். அதேசமயம் ஐரோப்பாவில் ஜனவரி 22 முதல் விற்பனை தொடங்கும்.
Huawei MatePad Pro 13.2 இன்ச் யின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் உலகின் முதல் ப்லக்ஷிபல் OLED பேனல் இதில் கிடைக்கிறது. இது 1000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 2,880 x 1,920 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. நிறுவனம் இதை மெல்லிய மற்றும் குறைந்த இடை டேப்லெட் என்று வர்ணித்துள்ளது. பின்புறத்தில், இது 13 மெகாபிக்சல் கேமராவை ப்ரைம் சென்சாராகக் கொண்டுள்ளது, அதனுடன் 8 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் உள்ளது. மேலும் இதில் 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இது ஒலிக்கு 6 இரட்டை சேனல் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: iQOO 12 5G இந்தியாவில் அறிமுகம், விலை மற்றும் சிறப்பம்சங்களை பாருங்க
ப்ரோசெசசிங் பற்றி பேசுகையில், இதில் Kirin 9000S சிப்செட் உள்ளது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 52000mm2 VC லிக்யுட் கூளிங்குடன் வருகிறது. சாதனம் 10,100mAh பேட்டரியை 88W பாஸ்ட் சார்ஜ் செய்கிறது. இது HarmonyOS 4 யில் இயங்குகிறது.