Huawei Mate X foldable 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்தியாவில் இந்த வருடம் அறிமுகமாகும்.

Updated on 22-Mar-2019
HIGHLIGHTS

உலகில் முதன் முறையாக ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது

Huawei நிறுவனம் தனது Mate X  மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் (MWC ) அறிமுகம் செய்தது Huawei நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு 5ஜி சேவை கிடைக்காது என்றாலும், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஹூவாய் மேட் எக்ஸ் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் முதன் முறையாக ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480×1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480×2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480×892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 MAh . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2299 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,85,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் விற்பனை இந்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :