Huawei புத்தம் புதிய அம்சத்துடன் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது

Updated on 17-Oct-2018
HIGHLIGHTS

Huawei Mate 20 மற்றும் Mate 20 pro ஸ்மார்ட்போன் மாடல்களுடன் Mate 20 X மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Huawei Mate 20 மற்றும் Mate 20 pro ஸ்மார்ட்போன் மாடல்களுடன் Mate  20 X மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Huawei மேட் 20 X ஸ்மார்ட்போனில் 7.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், உலகில் முதல் முறையாக லிக்விட் மல்டி-டைமென்ஷனல் கூலிங் சிஸ்டம் வேப்பர் சேம்பர் மற்றும் கிராஃபீன் ஃபிலிம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிக தரமுள்ள கேம் விளையாடும் போதும் சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Mate 20 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே Mate 20 X ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லெய்கா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புற பிங்கர்ப்ரின்ட்  சென்சார், IP53 சர்டிபிகேட் பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் என்கிரேவ் செய்யப்பட்ட கிளாஸ் பேக் பேனல் வழங்கப்பட்டுள்ளதால், கைகளில் இருந்து நழுவாமலும், கைரேகைகள் பதியாமல் இருக்கும். 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் மேட் 20 X ஸ்மார்ட்போனில் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.


Huawei Mate 20 X சிறப்பம்சங்கள்:

– 7.2 இன்ச் 2244×1080 பிக்சல் FHD+ OLED 18.7:9 DCI-P3 HDR டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– 720 MHz ARM மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP53)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை 

Huawei மேட் 20 X ஸ்மார்ட்போன் ஃபேன்டம் சில்வர் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.76,275 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Huawei மேட் 20 X ஸ்மார்ட்போன் லண்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :