Huawei mate ஸ்மார்ட்போன் அறிமுக தேதி பத்தி தெரியனுமா
ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் தனது கிரின் 980 7NM . பிராசஸர்களை அறிமுகம் செய்தது. புதிய பிராசஸரில் பிரத்யேக டூயல் நியூரல் நெட்வொர்க் பிராசசிங் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பிராசஸர் அறிமுகம் செய்ததும் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதன்படி மேட் 20 சீரிஸ் மாடல்களில் கிரின் 980 பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் இவை அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்-ரக மேட் 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அம்சங்கள் ஹூவாய் P20 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூவாய் மேட் 20 மாடலில் 4200 Mah
பேட்டரி, 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜர், கிளாஸ் பேக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் மேட் 20 சீரிஸ் மொத்தம் நான்கு மாடல்கள்: HMA-AL00, HMA-L09, HMA-L29, HMA-TL00 வெளியிடப்படும் என்றும் இவற்றின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile