ஹூவாய் அதன் புதிய மிட் ரேன்ஜ் போன் Huawei Enjoy 60X அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 7,000mAh பெரிய பேட்டரி கொண்டள்ளது.இது வெல்வேறு கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. Huawei Enjoy 60X யில் 90 ஹார்ட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த போன் ஸ்னாப்ட்ரகன் 680 சிப்செட்டுடன் வருகிறது.
Huawei Enjoy 60X ஆனது Orange, Gilt Black, Bright Moon Silver, Emerald Green மற்றும் Yaojin Black ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இந்த போன் மூன்று ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வெறியாண்டின் விலை CNY 1,749 (தோராயமாக ரூ. 20,000). 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 1,949 (தோராயமாக ரூ. 23,300) மற்றும் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜுடன் கூடிய டாப்-எண்ட் மாடல் CNY 2,299 (தோராயமாக ரூ. 27,00) ஆகும். இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் புதிய Huawei Enjoy 60X எப்பொழுது கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Huawei Enjoy 60Xயில் 6.95 இன்ச் முழு HD ப்ளஸ் LCD டிஸ்பிளே கொண்டுள்ளது. அது 90ஹாட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டுடன் 270 ஹாட்ஸ் டச் சப்ளிங் ரேட் மற்றும் (1080×2376) பிக்சல் ரெஸலுசன் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் ஸ்னாப்ட்ரகன் 680 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 8GB ரேம் மற்றும் 512 ஸ்டோரேஜ் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
போனின் கேமரா செட்டப் பற்றி பேசினால் இதில் இரட்டை பின் கேமரா உள்ளது. இதில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் செலஃபிக்கு 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி பற்றி பார்த்தல் இதில் 7000Mah பேட்டரி பேக்கப் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 22.5W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனின் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.