Honor X9b 5G அறிமுகம், இந்த போன் நிறுவனத்தின் வெப்சைட்டில் சவூதி அரேபியா மற்றும் UAE இணையதளத்தில் தெளிவான சிறப்பம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போன் ஹானர் X9a க்கு அடுத்ததாக வருகிறது. X9b 5G ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் சிப்செட், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற சில சிறந்த அம்சங்களைக் கொண்டு வருகிறது.
இந்த போனில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1.5K 1200×2652 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. 19:9 எஸ்பெக்ட் ரேசியோ கூடிய இந்த டிஸ்ப்ளே பேனல் 429 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 92.8% ஸ்க்ரீன் பாடி ரேசியோ கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா செட்டிங் உள்ளது, இதில் 108MP ப்ரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும். இதன் 108MP ப்ரைம் கேமரா f/1.75 aperture மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்டுடன் வருகிறது.
ஹானரின் இந்த டூயல் சிம் 5ஜி ஃபோன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 உடன் வருகிறது. இந்த போனில் குவால்காமின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 ப்ரோசெசர் உள்ளது. இது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
ஹானர் X9b 5G யின் அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மற்ற வகைகளில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
ஹானர் X9b விலை தகவலை பற்றி அறிவிக்கவில்லை, மிட்நைட் பிளாக், எமரால்டு க்ரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் வருகிறது. இதன் பின்புறத்தில் வேகன் லெதர் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Amazon GIF Sale :இந்த Air Purifier யில் கிடைக்கிறது செம்ம ஆபர்