Honor X50i Plus அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சம் தெருஞ்சிக்கலாம் வாங்க

Honor X50i Plus அறிமுகம் விலை மற்றும் சிறப்பம்சம் தெருஞ்சிக்கலாம் வாங்க
HIGHLIGHTS

Honor சீனாவில் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஃபோன் Honor X50i+ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.,

ந்த போன் பிங்க், கிரீன், ப்ளூ மற்றும் பிளாக் என 4 நிற விருப்பங்களில் வருகிறது.,

Honor X50i Plus யில் 6.7-இன்ச் OLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது,

Honor சீனாவில் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஃபோன் Honor X50i+ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது., புதிய போனில் 90Hz OLED ஸ்க்ரீன் டைமன்சிட்டி 6080 பிராசஸர் மற்றும் 108 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா உள்ளது. Honor X50i Plus யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Honor X50i Plus விலை தகவல்

விலையைப் பற்றி பேசுகையில், ஹானரின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 1,599 யுவான் (தோராயமாக ரூ. 18,266) மற்றும் 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 1,799 யுவான் (தோராயமாக ரூ. 20,601).இருக்கும் இந்த போன் பிங்க், கிரீன், ப்ளூ மற்றும் பிளாக் என 4 நிற விருப்பங்களில் வருகிறது.,

Honor X50i Plus சிறப்பம்சம்

Honor X50i Plus யில் 6.7-இன்ச் OLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது, இது 1080 x 2400 பிக்சல்கள் FHD+ ரேசளுசன் 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2,000 nits வரை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் டைமென்சிட்டி 6080 ப்ரோசெசருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மேஜிக் OS மூலம் செயல்படுகிறது. இந்த ஃபோனில் 12ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 8ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது, 512ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.

கேமரா

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் LED ப்ளாஷ் கொண்ட 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

இதையும் படிங்க: WhatsApp கால் மூலம் இனி உங்களை யாரும் Track செய்ய முடியாது வருகிறது சூப்பர் அம்சம்

பேட்டரி

இந்த ஃபோனில் 4,500mAh பேட்டரி உள்ளது, இது 35W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்த ஃபோன் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனருடன் வருகிறது. டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 161.05 mm அகலம் 74.55 mmதிக்னஸ் 6.78 mmமற்றும் எடை 166 கிராம். X50i+ சந்தையில் Oppo A2 5G உடன் போட்டியிடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo