சீனா ஸ்மார்ட்போன் தயருப்பு நிறுவனமான Honor அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது IFA 2023 யில் அதன் லேட்டஸ்ட் போல்டபில் ஸ்மார்ட்போன் ஆன Honor V Purse அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான வெளிப்புற போல்டபில் டிஸ்ப்ளே டிசைனுடன் வருகிறது, இது மடிக்கும்போது 9mm க்கும் குறைவாக இருக்கும். இந்த டிசைன் சமீபத்திய போல்டபில் போனை Honor Magic V2 ஸ்மார்ட்போனை விட 10.1% மெல்லியதாக ஆக்குகிறது.
பெயர் குறிப்பிடுவது போல, Honor V Purse ஒரு போல்டபில் போனை போல இருக்கும் இது ஒரு ஃபேஷன் யில் மாற்றப்பட்டுள்ளது ஹேண்ட்பேக் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் இந்த போன் எப்பொழுதும் ஆன் டிஸ்பிளேவையும் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.மேலும் இந்த போனில் செயின்கள், இதில் கட்டப்பட இறக்கைகால் அழகாக அசையும் ஒருவேளை பயனர்கலான உங்களுக்கு அதன் பட்டைகளை மாற்றி, வழக்கமான பர்ஸ் அல்லது ஹேன்ட்பேக்காக அணியலாம்.
Honor V Purse விலை மற்றும் விற்பனை
Honor V Purse மூன்று வித்தியாசமான நிறத்தில் வரும் amellia Gold, Glacier Blue மற்றும் Elegant Black விருப்பங்களில் வரும்.இந்த போன் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும், இதன் விலை முறையே 5999 யுவான் (தோராயமாக ரூ.70,000) மற்றும் 6599 யுவான் (தோராயமாக ரூ.75,000) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே Honor சீனாவின் ஆன்லைன் ஸ்டோரில் லிமிடெட் முன் சேலுக்கு கிடைக்கிறது. நிறுவனம் இந்த போனை அக்டோபர் 10 முதல் சீனாவில் அனுப்பத் தொடங்கும்.
Honor V Purse யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 7.71 இன்ச் கொண்ட OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இது 2160Hz ஹை ப்ரீகுவன்ஷி PWM டிம்மிங் டேக்நோலோஜி சப்போர்ட் செய்கிறது, இந்த போனை மடிந்தால், இந்தத் ஸ்க்ரீன் சைஸ் 6.45-இன்ச் ஆகக் குறைகிறது. ஸ்மார்ட்போனின் சீன வேரியன்ட் 1600 nits ஹை ப்ரைட்னாஸ் மற்றும் DCI-P3 பீக் வைட் கலர் சப்போர்ட் செய்கிறது
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் , இதில் Snapdragon 778G 6nm சிப்செட் கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு மூலம் ஆதரிக்கப்படுகிறது, Honor V Purse 512GB வரை ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.மற்றும் NM கார்டு மூலம் பயனர்கள் அதன் மெமரியை 256 ஜிபி வரை மேலும் அதிகரிக்கலாம் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 யில் இயங்குகிறது.
போனின் கேமராவை பற்றி பேசினால், இதில் போட்டோ எடுப்பதற்கு, Honor V Purse யில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் 50எம்பி மெயின் சென்சார் மற்றும் 12எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த போனில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு டிஸ்ப்ளே நாட்ச் உள்ளே 8எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.
இது தவிர, ஹானரின் புதிய போல்டபில் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் 4500mAh பேட்டரி அலகுடன் வருகிறது, இது 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.